வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம், இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேர்வு நிறுவனமான Institute of Banking Personnel Selection வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்த பணியில் விண்ணப்பம் செய்வதற்கு 21-ம் தேதி கடைசி தேதி தான் கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டிருந்து. இதனை தொடர்ந்து தற்போது 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள் மற்றும் பணியின் விவரங்கள்
மொத்தமாக காலியிடங்களின் எண்ணிக்கை 8285 இலிருந்து 8612 ஆக தற்போது அதிகரித்துள்ளது.
- Officer Scale – I
- Law Officer (Grade – II)
- Agriculture Officer (Grade – II)
- Officer (Grade III)
- Law Officer (Grade – II)
- Chartered Accountant (Grade II)
- IT Officer (Grade II)
- Banking Officer Scale – II
வயது வரம்பு
இந்த பணியில் சேர விருப்பம் இருந்தால் உங்களுடைய வயது 18 லிருந்து 32 வயதுக்குள் இருக்கவேண்டும். மேலும், சிலருக்கு வயது வரம்பில் தளர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
கல்வி தகுதி
- மேற்கான பணிக்குநீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றால், நீங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- உதவி மேலாளர் பணிக்கு ‘Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Agricultural Marketing and Cooperation, Information Technology, Management, Law, Economics or Accountancy ‘ துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்ற பதவிகளின் தகவலை இந்த PDF-க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
எப்படி விண்ணப்பிப்பது..?
- IBPS இன் அதிகாரப்பூர்வ தளமான ibps.in ஐப் பார்வையிடவும். முகப்புப் பக்கத்தில் கிடைக்கும் IBPS RRB ஆட்சேர்ப்பு 2023 இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- அதிகாரி அளவுகோல் I, II மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- நீங்களே பதிவு செய்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும். முடிந்ததும், சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
- விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
- உறுதிப்படுத்தல் பக்கத்தைப் பதிவிறக்கி, மேலும் தேவைக்காக அதன் கடின நகலை வைத்திருக்கவும்.
மேலும், விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கு முந்தைய பயிற்சி (PET) ஜூலை 17 முதல் 22 வரை நடைபெறும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
மேலும், இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய தகவல்
Application Link –
Office Assistant (Multipurpose) – https://ibpsonline.ibps.in/rrbxiioamy23/
Officers (Scale 1) – https://ibpsonline.ibps.in/crprrb12my23/
Officers (Scale 2 & 3) – https://ibpsonline.ibps.in/crps23may23/