பெல் நிறுவனத்தில் என்ஜினீயர், சூப்பர்வைசர் பணியிடங்கள்…! உடனே அப்ளை பண்ணுங்க..!

சென்னையில் உள்ள பெல் (BHEL)நிறுவனத்தில் பின்வரும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:

BHEL 2

பதவியின் பெயர்

என்ஜினீயர்ஸ், சூப்பர்வைசர்

காலிப்பணியிடங்கள்: 10

(என்ஜினீயர் – 4, சூப்பர்வைசர் – 6)

வயதுத்தகுதி

1.5.2023ம் தேதியின்படி விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 34 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி

என்ஜீனியர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் அல்லது பல்கலைக்கழகத்தில் பிஇ, பி.டெக் என ஏதாவது ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சூப்பர்வைசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் சிவில் என்ஜினீயரிங்கில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்

என்ஜினீயர் பதவிக்கு ரூ.82,620ம், சூப்பர்வைசர் பதவிக்கு ரூ.46,130ம் மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்துத் தேர்வு கிடையாது.

விண்ணப்பிப்பது எப்படி?

கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று விண்ணப்பதாரர்கள் ஆன்லை;ன மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 8.6.2023

மேலும் விவரங்களுக்கு:

Leave a Comment