தமிழ்நாட்டில் உள்ள மத்திய பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு.. நேர்காணல் மட்டும்தான்.. இன்றே அப்ளை பண்ணுங்க..

இந்தியாவில் பல்வேறுபட்ட மத்திய வேலைவாய்ப்புகள் உள்ளன. இதற்கு பெரும்பாலும் எழுத்து தேர்வின் வாயிலாக மட்டுமே ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அப்படிப்பட்ட வேலைவாய்ப்பில் தற்போது தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் வெறும் நேர்காணல் மூலம் மட்டுமே பணியிடம் வழங்கும்படியான ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதனை பற்றிய தகவல்களை இப்போது பார்க்கலாம்.

முக்கியமான தேதிகள்:

இப்பணிக்கான விண்ணப்பங்களை 16.05.2023 முதல் 30.05.2023 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பணியின் பெயர்:

  • பிராஜக்ட் அசிஸ்டெண்ட்-1
  • பிராஜக்ட் அசோஸியேட்- 1

பணியிடம்:

  • திருவாரூர்

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 35க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

கல்வி தகுதி:

  • பிராஜக்ட் அசிஸ்டெண்ட் :

பி.எஸ்சி ஃபுட் டெக்னாலஜி/ டெய்ரி டெக்னாலஜி/ மீட் டெக்னாலஜி/ ஃபிஷ் டெக்னாலஜி/ பேக்கரி டெக்னாலஜி/ பப்ளிக் ஹெல்த்/ ஃபுட் மைக்ரோபயாலஜி/ BVoc in பவுல்ட்ரி அண்ட் மீட் டெக்னாலஜி என எதேனும் ஒரு துறையில் 55% மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.

  • பிராஜக்ட் அசோஸியேட்:

எம்.எஸ்சி/ எம்.டெக் பயாலஜி/ பயோஇன்ஃபார்மெடிக்/ ஃபுட் டெக்னாலஜி அண்ட் டெய்ரி டெக்னாலஜி, டெய்ரி சயின்ஸ்/ மைக்ரோபயாலஜி.

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

சம்பள விவரம்:

  • பிராஜக்ட் அசிஸ்டெண்ட்- ரூ. 20000+8% HRA
  • பிராஜக்ட் அசோஸியேட்- ரூ. 30000+8% HRA

விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு எந்த வித கட்டணமும் கிடையாது.

மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://cutn.ac.in/wp-content/uploads/2023/05/Advertisement_for_the_post_of_Project_Assistant_and_Project_Associate_15052023.pdf

Leave a Comment