SAIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க.!!

SAIL செய்ல் என்பது இந்திய அரசுக்குச் சொந்தமான உருக்கு உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்நிலையில், இந்த நிறுவனமானது பொது கடமை மருத்துவ அதிகாரி (GDMO) பதவிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் வேண்டும் என வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியீட்டுள்ளது. குறிப்பிடப்பட்ட பதவிக்கு 01 காலியிடங்கள் உள்ளன. மற்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர் மற்றும் காலியிடம்

பொது கடமை மருத்துவ அதிகாரி (GDMO) பதவிக்கு 1 காலியிடம் மட்டுமே  உள்ளது.

சம்பளம்

மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு மாதம் சம்பளமாக ரூ.9,0000 பெறுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 69  வயது இருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான கல்விதகுதி

இந்த பொது கடமை மருத்துவ அதிகாரி (GDMO) பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதரர்கள் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தகுதி அளவுகோல்கள்

இந்திய மருத்துவ கவுன்சிலில் (MCI) பதிவுசெய்யப்பட்ட அல்லது செல்லுபடியாகும் பயிற்சியாளர் உரிமங்களைக் கொண்ட மருத்துவத் துறையில் மருத்துவர்கள் பட்டத்தை பெற்றிருக்கவேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது

இந்த பணியில் சேர ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sail.co.in/en/home  க்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரத்தை பூர்த்தி செய்து விண்ணப்பப்  முன்கூட்டியே நகலை மின்னஞ்சல் ஐடிக்கு (sanjitkumardas@sail.in) சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் போது, கொல்கத்தாவின் இஸ்பாட் பவனில் (வாக்-இன்-நேர்காணல்) சேவை அடிப்படையில் மருத்துவத் துறைகளில் டாக்டரின் ஈடுபாடு” என்று எழுத வேண்டும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 30.06.2023 என்பதும் குறிப்பிடத்தக்கது.  மேலும் தகவலை தெரிந்துகொள்ள இந்த pdf-ஐ க்ளிக் செய்யுங்கள் .

Leave a Comment