இண்டலிஜன்ஸ் பியூரோவில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு.. 700+ காலியிடங்கள்..உடனே அப்ளை பண்ணுங்க..

இண்டலிஜன்ஸ் பியூரோ என்பது இந்தியாவின் உள்நாட்டு உளவுதுறை பிரிவாகும். இந்த உளவு துறையானது இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. தற்போது இத்துறையில் டெக்னிகல் பிரிவில் பல்வேறு பணிக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதனை பற்றிய தகவல்களை பார்ப்போம்.

முக்கியமான நாட்கள்:

இப்பணிக்கான விண்ணப்பங்களை வருகின்ற 03.06.2023 முதல் 23.06.2023 வரைhttp://www.mha.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து  கொள்ளலாம்.

பணியின் பெயர்:

ஜூனியர் இண்டலிஜன்ஸ் ஆஃபிசர், கிரேடு-2/ டெக்னிகல்-747.

விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கான தேர்வு கட்டணம்- ரூ.50 மற்றும் ஆட்சேர்ப்பு செயலாக்க கட்டணம் ரூ.450ஆக வசூலிக்கப்படுகிறது.

அன்ரிசர்வ்டு, பொருளாதார ரீதியில் பலவீனமானவர்கள், ஓபிசி போன்ற பிரிவில் உள்ள ஆண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 500 விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதினையும் அதிகபட்சமாக 27 வயதினையும் பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க எதேனு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மிண்ணணுவியல் துறையில் டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது மிண்ணணுவியல், கணிதம். கணினி அறிவியல், இயற்பியல் போன்ற எதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டபடிப்பு பெற்றிருக்க வேண்டும்.

வருமானம்:

இப்பணிக்கு லெவல்-4 பே மேட்ரிக்ஸ் படி ரூ. 25,500 முதல் 81,100 வரை சம்பளமாக நிர்ணயிக்கப்படுகிறது.

தேர்வு நிலை:

  1. ஆன்லைன் தேர்வு
  2. நேர்காணல்

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://drive.google.com/file/d/13ZctBa6ppgeQ444AE6XG3wDI4y8Hc0LD/view

Leave a Comment