ஆசிரியர் வேலை தேடிகொண்டு இருக்கீங்களா? அப்போ உங்களுக்கான சூப்பர் சாய்ஸ்!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா (Kendriya Vidyalaya) மற்றும் நவோதயா (Navodaya) பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் பிற பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கி உள்ளது. வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம்.

இந்த விண்ணப்பம் முழுவதும் ஆன்லைனில் மட்டுமே செய்ய வேண்டும். CBSE, KVS, NVS ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற எந்த வழியிலும் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிக்கலாம் என்றால் நவம்பர் 14ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 4 இரவு 11.50 மணிக்கு விண்ணப்பமும், கட்டணமும் நிறைவடையும்.

நவம்பர் 14 முதல் டிசம்பர் 4 வரை செயல்படும் கட்டணம் செலுத்தும் வசதியும் . காலக்கெடு முடிந்த பிறகு, விண்ணப்பமும் திறக்கப்படாது என்பதால், விரைவாக பதிவு செய்வது நல்லது.

இந்த அறிவிப்பின் மூலம் பல ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு பெரிய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி துறையில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை தவற விடாமல் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வேலைகள், தகுதி விவரம், சம்பளம் உள்ளிட்ட கூடுதல் தகவல்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கிடைக்கும்.

Leave a Comment