சென்னை மெட்ரோவில் பணிபுரிய விருப்பமா?.. இதோ வந்துவிட்டது உங்களுக்கான வாய்ப்பு..

சென்னை மெட்ரோவில் பல்வேறு காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். இதனை பற்றிய தகவல்களை காண்போம்.

முக்கியமான தேதிகள்:

இப்பணிக்கான விண்ணப்பங்களை 31.05.2023 முதல் 30.06.2023 வரை சமர்பிக்கலாம்.

காலிபணியிடங்கள்:

  • தலைமை பொது மேலாளர்(Chief General Manager)- 1
  • பொது மேலாளர்(General Manager)- 1
  • கூட்டு பொது மேலாளர்(Joint General Manager)- 1
  • அஸிஸ்டெண்ட் மேனேஜர்(Assistant Manager)- 1

வயது வரம்பு:

தலைமை பொது மேலாளர்(Contract Management) மற்றும் பொது மேலாளர்(Planning & Business Development):

இப்பதவிக்கு குறைந்தபட்சம் 45 வயதினையும் அதிகபட்சமாக 55 வயதினையும் அடைந்திருக்க வேண்டும்.

கூட்டு பொது மேலாளர்(Electrical and Mechanical):

இப்பதவிக்கு விண்ணப்பிக்க 43 வயதினை அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

அஸிஸ்டெண்ட் மேனேஜர்(Company Secretary):

இப்பதவிக்கு விண்ணப்பிக்க 30 வயதினை அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

மாத வருமானம்:

இப்பணிகளுக்கான மாதவருமானமாக குறைந்தபட்சம் ரூ. 60000த்தில் இருந்து அதிகபட்சமாக ரூ. 230000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

இதனை பற்றிய விவரங்களுக்கு கீழ்காணும் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-CON-07-2023-Website-2.pdf

Leave a Comment