பட்டதாரிகளுக்கு இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..இன்றே அப்ளை பண்ணுங்க..

Physics Research Laboratory(PRL) என்பது இந்தியாவில் உள்ள விண்வெளி சம்பந்தமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தற்போது பல்வேறு காலிபணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியும் வேலை பார்க்க ஆர்வம் இருப்பவர்களும் http://www.prl.res.in என்ற இணையதளத்திற்கு சென்று இன்றே விண்ணப்பிக்கலாம்.

முக்கியமான தேதிகள்:

இப்பணிக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

இப்பணிக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 10.06.2023

இப்பணிக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2023

காலியிடங்கள்:

அஸிஸ்டெண்ட் – 01

ஜுனியர் ட்ரான்ஸ்லேஷன் ஆபிஸர் – 01

நூலக உதவியாளர் – 02

வயது வரம்பு:

இப்பணிக்கு குறைந்தபட்சம் 18 வயதினையும் அதிகபட்சமாக 35 வயதினையும் அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

கல்வி தகுதி:

அஸிஸ்டெண்ட்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முதல் வகுப்பில் பட்ட படிப்பினை பெற்றிருத்தல் வேண்டும். மேலும் அவைகளின் — 6.32க்கும் மதிப்பெண் 60–க்கும் குறையாமல் இருக்க வேண்டும்.

ஜுனியர் ட்ரான்ஸ்லேஷன் ஆபிஸர்:

ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் ஹிந்தி மொழியை முதன்மை மொழியாக எடுத்து முதுகலை பட்ட படிப்பினை படித்திருக்க வேண்டும்.

நூலக உதவியாளர்:

நூலக அறிவியல் முதல் வகுப்பில் முதுகலை பட்டபடிப்பினை பெற்றிருக்க வேண்டும்.

மாத வருமானம்:

இப்பணிகளுக்கு மாதவருமானமாக ரூ.25,500 முதல் ரூ.44,900 வரை அளிக்கப்படுகிறது.

விண்ணப்ப கட்டணம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு நிலை:

  1. எழுத்து தேர்வு
  2. திறன் தேர்வு

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.prl.res.in/~notices/Advertisement/2023/06/30/ADVT012023.pdf

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க:

https://www.prl.res.in/OPAR/

Leave a Comment