சேலம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு..40+ காலியிடங்கள்..இன்றே அப்ளை பண்ணுங்க..

சேலம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்ப்பட்டுள்ள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

முக்கியமான தேதி:

இப்பணிக்கான விண்ணப்பங்களை வருகின்ற 25.06.2023க்குள் கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும். விண்ணப்பங்களை நேரிலோ/விரைவு தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

கல்வி தகுதி:

ஒவ்வொரு பணிக்கு ஏற்ப கல்வி தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. இதனை பற்றிய தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 23 வயதினையும் அதிகபட்சமாக 40ம் வயதினையும் பூர்த்தி அடைந்தவாராக இருத்தல் வேண்டும்.

நிபந்தனைகள்:

  1. இந்த பணி தற்காலிகமானது.
  2. இந்த பணி எந்த ஒரு காலத்திலும் நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
  3. பணியில் சேர சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
  4. பணிக்கு தொகுப்பூதியம் மட்டும் அளிக்கப்படும். எவ்வித படிகளும் வழங்கப்பட மாட்டாது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,

மாவட்ட நலவாழ்வு சங்கம், சேலம்

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,

பழைய நாட்டாண்மை கழக கட்டிட வளாகம், சேலம்-636001.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அறிவிப்பினை காணவும்.

https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2023/06/2023061232.pdf

இப்பணிக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2023/06/2023061292.pdf

 

Leave a Comment