ஆசிரியர் பணிக்கு படித்துள்ளீர்களா?.. இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு..வாய்ப்பை தவற விடாதீர்கள்..

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் தகுதியான ஆசிரியர்களை தேர்வு மூலம் அவரவர் தகுதிக்கு ஏற்ப பணியில் அமர்த்தும் ஒரு பொறுப்பினை கொண்டுள்ளது. இந்த வாரியம் தற்போது வட்டார கல்வி அலுவலர்(Block Educational Officer) தேர்விற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதனை பற்றிய தெளிவான தகவல்களை பார்ப்போம்.

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 06.06.2023

விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.07.2023

தேர்வு தேதி – 10.09.2023.

காலிபணியிடம்:

தொகுதி கல்வி அலுவலர் – 33

வயது வரம்பு:

இப்பணிக்கு  விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், வரலாறு, விலங்கியல், நிலவியல் போன்ற ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை கல்வியாளர் பட்டத்தினை பெற்றிருக்க வேண்டும்.

மாத வருமானம்:

இப்பணிக்கு சம்பளமாக குறைந்தபட்சம் ரூ. 36900 முதல் அதிகபட்சமாக ரூ. 116600 வரை பெறப்படுகிறது.

விண்ணப்ப கட்டணம்:

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ரூ. 300 விண்ணப்ப கட்டணமாகவும் இதனை தவிர மற்ற பிரிவினருக்கு ரூ. 600 விண்ணப்ப கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.

தேர்வு நிலை:

  1. கட்டாய தமிழ் தகுதி தேர்வு
  2. எழுத்து தேர்வு
  3. சான்றிதழ் சரிபார்ப்பு

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://trb.tn.gov.in/admin/pdf/4542271547press%20news_05.06.2023.pdf

இப்பணிக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

http://www.trb.tn.gov.in

Leave a Comment