இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பல்வேறு காலிப்பணிகள்..! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..இதுதான் கடைசி தேதி..!

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (Sports Authority of India – SAI) இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டினைப் பரப்பவும் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் 1984இல் நிறுவப்பட்ட மீயுயர் தேசிய விளையாட்டு அமைப்பாகும்.

தற்பொழுது, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பதவியை நிரப்புவதற்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள்:

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒப்பந்த அடிப்படையில் Young Professional (P&A), Young Professional (ARM), Junior Consultant (PM) ஆகிய பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு மொத்தமாக 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

SAI
SAI

விண்ணப்பதாரர் வயது:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 32 வயது முதல் 40 வயது உடையவராக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

SAI
SAI

விண்ணப்பதாரர் தகுதி:

Young Professional (P&A):

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து B.Tech/ MBA/ PGDM (2 ஆண்டுகள்) தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் விளையாட்டு நிர்வாகத்தில் எம்பிஏ/ முதுகலை டிப்ளோமா (2 ஆண்டுகள்) முடித்திருக்க வேண்டும்.

Young Professional (ARM):

  • ஒரு புகழ்பெற்ற நிறுவனத்திலிருந்து விளையாட்டு நிர்வாகத்தில் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும். (சான்றிதழ்/டிப்ளோமா காலம் 6 மாதங்களுக்கு மேல் இருக்க வேண்டும்) அல்லது,
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனங்களிலிருந்து எம்பிஏ அல்லது பிஜிடிஎம் (2 ஆண்டுகள்) முடித்திருக்க வேண்டும்.

Junior Consultant (PM):

BE/ B.Tech அல்லது 2 ஆண்டுகள் PGDM அல்லது MBBS அல்லது LLB அல்லது CA அல்லது ICWA அல்லது 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் sportsauthorityofindia.nic.in அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்கச் வேண்டும்.
  • பிறகு அறிவிப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை நிரப்பவேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் jobs.saibangalore@gmail.com. என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மேற்கண்ட பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,00,000 வரை சம்பளமாக வழங்கப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர் ஜூலை 10ம் தேதி முதல் ஜூலை 17 வரை விண்ணப்பிக்கலாம். அதனைத்தாண்டி வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Leave a Comment