job news
+2 முடிச்சிட்டீங்களா?..அடுத்து என்ன படிக்கலாம்?.. கை நிறைய வருமானம் வேணுமா?.. அப்போ இத பாருங்க..

+2 பொதுதேர்வுகள் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையின் அனைவருக்கும் மனதில் தோன்றும் ஒரு விஷயம் அடித்து நாம் என்ன படிக்கலாம், எந்த துறையினை தேர்ந்தெடுத்தால் நமது வாழ்க்கை வளமாகும் என்பதுதான். சிலர் முன்கூட்டியே என்ன படிக்கலாம் என தீர்மானித்திருப்பர். ஆனால் சில மாணவர்கள் என்ன படிப்பை எடுக்கலாம் என ஒரு குழப்பமான மனநிலைமையில் இருப்பார்கள். அவர்களுக்கான சில வழிகளை நாம் பார்க்கலாம்.
கணினி மென்பொறியாளர் (Computer Science Engineering):
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் கணினி பொறியாளர்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது. இவர்களுக்கு தொடக்கத்தில் சராசரி ஆண்டு வருமானமாக ரூ 3-4 லட்சம் வரை கொடுக்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை நாம் பயன்படுத்தி கொள்ள கம்யூட்டர் சம்பந்தமான துறையில் பட்டபடிப்பை பயின்றிருந்தால் நல்லது.

computer engineering
தரவு விஞ்ஞானி(Data Scientist):

data scientists
டேடா சயிண்டிஸ்ட் எனும் இந்த துறையானது வரும் காலத்தில் மிகவும் தேவைப்படும் ஒரு துறையாகும். தற்போது ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு உலகை ஆள வருவதால் இதில் டேடா சயிண்டிஸ்டடின் பங்கும் அதிகம் தேவைப்படும். இந்த பணியில் உள்ளவர்கள் ஆண்டு வருமானமாக சராசரியாக ரூ 4-5 லட்சம் வரை சம்பாதிக்கலாம். எனவே டேடா சயிண்டிஸ்ட்(Data Scientist) எனும் இத்துறையில் பட்டபடிப்பை பெறலாம்.
மேலாண்மை ஆலோசகர்(Management Consultant):

management consultant
பல்வேறு நிறுவனங்கள் தங்களில் செயல்திறனை அதிகரிக்கவும், லாபத்தை பெருக்கவும் மேலாண்மை ஆலோசகர்(Management Consultant) என அழைக்கபடும் இவர்கள் தேவைபடுகிறார்கள். இவர்களுக்கான தொடக்க ஆண்டு வருமானம் ரூ5-6 லட்சம் ஆகும். இதற்கு பிஸினஸ் மேனேஜ்மெண்டில் பட்டப்படிப்பினை பெற்றிருக்க வேண்டும்.
பட்டய கணக்காளர்(Chartered Accountant):

chartered accountant
தொடக்க வருமானமாக ரூ. 7-8 லட்சம் வரை தரும் இந்த துறை மிக சிறந்த துறையாகும். படிப்பதற்கு சற்று கடினமாக இருந்தாலும் இதனை பயின்று தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மை ஏராளம். நமக்கு நன்கு கணக்கு தெரிந்திருந்தால் இந்த துறையில் பட்டம் பெறலாம்.
முதலீட்டு வங்கியாளர்(Investment Banker):

investment banker
நிதி, பொருளாதாரம் அல்லது வணிக மேலாண்மை போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பை பெற்றிருந்தால் இந்த துறையில் நாம் வருமானம் பார்க்கலாம். இதன் தொடக்க வருமானம் ரூ 8-10 லட்சம் ஆகும். இவர்களின் முக்கிய பொறுப்பு நிறுவனங்கள் தங்களது முதலீட்டை விற்றோ அல்லது வாங்கியோ நிறுவனத்தின் லாபத்தை பெறுக்குவதற்கு உதவுவதாகும்.
இதை தவிர இன்னும் ஏராளமான துறைகளும் உள்ளன. அனைவரும் எந்த துறையில் பயின்றாலும் அதில் முழு ஆர்வத்துடனும் முழு ஈடுபாடுடனும் படித்தால் அவர்களுக்கு வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள்..
