Connect with us

latest news

படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்!.. மாணவர்கள் முன்பு பேசிய தவெக தலைவர் விஜய்…

Published

on

vijay

தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் சமீபத்தில் தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்திருந்தார். அதோடு, தனது அரசியல் கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் எனவும் அவர் அறிவித்தார். மேலும், 2026ம் வருடம் நடிக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒருபக்கம், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பெற்றோருடன் நேரில் வரவழைத்து அவர்களை பாராட்டி அவர்களுக்கு பாராட்டு பத்திரம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதை விஜய் கடந்த ஆண்டு துவங்கினார்.

தற்போது 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி பள்ளிகள் துவங்கப்பட்டதால் மீண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னைக்கு வரவழைக்கப்பட்டார்கள். சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த ஏற்பாடு நடந்தது,

vijay

இந்த விழாவுக்கு இன்று காலை 10 மணிக்கு வந்த விஜய் ‘உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. பாஸிட்டிவான எனர்ஜி இருப்பவர்களை பார்த்தால் நமக்கும் அது ஒட்டிக்கொள்ளும். உங்கள் முகத்தை பார்க்கும்போது எனக்கும் அது வந்துவிட்டது. நீங்கள் உங்கள் கேரியரை தேர்ந்தெடுக்கும் அடுத்த கட்டத்தை நோக்கி போகிறீர்காள்.

சிலருக்கு இதில் குழப்பம் ஏற்படும். எல்லா துறையுமே நல்ல துறைதான். உங்களுக்கு பிடித்த துறைய தேர்ந்தெடுத்து அதில் 100 சதவீத உழைப்பை கொடுத்தால் வெற்றி உங்களை தேடி வரும். தமிழ்நாட்டிற்கு நல்ல தலைவர்கள் வேண்டும். எல்லா துறைக்கும் இது பொருந்தும். படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். எதிர்காலத்தில் படித்த மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அதுவும் ஒரு துறைதான். இப்போதைக்கு படிப்பில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் தினமும் கேட்கும் செய்திகளிலேயே அரசியல் இருக்கிறது.

vijay

ஒரு செய்தியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்வார்கள். செய்தி வேறு. கருத்து வேறு. இதை ஆராய்ந்து புரிந்து கற்றுக்கொள்ளுங்கள். நல்லவனை கெட்டவானாகவும், கெட்டவனை நல்லவனாகவும் காட்டுகிறார்கள். ஆனால், எது உண்மை என்பதை ஆராய கற்றுக்கொள்ளுங்கள். ஒரு நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கும் விசாலமான உலக பார்வை வந்துவிட்டாலே போதும். அதுவே நாட்டுக்கு நீங்கள் செய்யும் பங்களிப்பு. நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.

மது மற்றும் போதை பொருட்கள் பக்கம் போகாதீர்கள். உங்கள் நண்பர்களுக்கு அந்த பழக்கம் இருந்தால் அவர்களை நல்வழிப்படுத்துங்கள். உங்கள் அடையாளத்தை இழந்துவிடாதீர்கள். போதை பழக்கம் இப்போது இளைஞர்களிடம் அதிகரித்துவிட்டது. இதற்கு அரசை மட்டுமே நாம் குறை சொல்ல முடியாது. நாம்தான் சுயக்கட்டுப்பாடு மற்றும் சுய ஒழுக்கத்தோடு இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்’ என விஜய் மாணவ மாணவிகளுக்கு அறிவுரை கூறினார். அதன்பின் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு பத்திரத்தை கொடுத்தார்.

google news