Connect with us

india

மனைவியை கொன்று ஓடிப்போனதாக நாடகம் போட்ட கணவர்… மொட்ட கடுதாசியால் 15 வருடம் கழித்து வந்த மர்மம்…

Published

on

15 வருடமாக கேரளாவை சேர்ந்த திருப்பெருந்துறை கிராம மக்களுக்கு ஒரு வயது குழந்தையை விட்டுவிட்டு ஒரு பெண் தன்னுடைய காதலருடன் ஓடிவிட்டதாக நினைத்த நிலையில் போலீசாரால் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

30 வயதான கலா என்ற அப்பெண்ணை அவரின் கணவர் அனில் குமாரே கொன்று அவர்கள் வீட்டின் செப்டிக் டேங்கில் போட்டு மூடி மறைத்த விஷயம் தான் அது. இக்கொலை சம்மந்தப்பட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து இருக்கும் நிலையில், இஸ்ரேல் நாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் அனில் குமாரை இந்தியா அழைத்து வரவும் முயற்சி எடுக்கப்பட்டு இருக்கிறதாம்.

ஜினு கோபாலன், ஆர் சோமராஜன், ப்ரமோத் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில் அவர்கள் கூறிய சாட்சியங்களின் அடிப்படையில் செப்டிக் டேங்கில் இருந்து கலாவின் கொலை குறித்த தடயங்கள் சேகரிக்கப்பட்டு இருக்கிறது. ஆலப்புழா காவல் கண்காணிப்பாளர் சைத்ரா தெரசா ஜான் கூறும் போது, கலா 2008-09க்குள் காணாமல் போய் இருக்கிறார்.

ஆனால், இது எங்களுக்கு தனிப்பட்ட பிரச்னையால் ஏற்பட்ட கொலையாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. செப்டிக் டேங்கில் இருந்து எடுக்கப்பட்ட தடயங்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.

15 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இது காவல்துறைக்கு பெரிய சவாலான விஷயமாகி இருக்கிறது. கலா காணாமல் போனது குறித்து எந்த போலீஸ் புகாரும் இல்லை. திடீரென எங்களுக்கு பெயரில்லாத கடிதத்தில் இந்த கொலை குறித்த துப்பு கிடைத்தது. இப்போதைக்கு அந்த லெட்டர் குறித்து வேறு எதுவும் சொல்ல முடியாது எனவும் குறிப்பிட்டார்.

கலாவை குமாரும், கைது செய்யப்பட்ட அவர் உறவினர்களும் காரில் அழைத்து சென்று வலிய பெரும்புலா பாலத்தில் கொலை செய்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. குமாருக்கும், கலாவிற்கு 2007ம் ஆண்டு திருமணம் முடிந்தது. இருவரும் வேறு ஜாதியை சேர்ந்ததால் இரு குடும்பத்திலும் இத்திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்ததாம். திருமணம் முடிந்து சில மாதங்களில் அனில் வெளிநாட்டு வேலைக்கு சென்று விட்டார்.

கலா காணாமல் போன போது அவருக்கு ஒரு வயதில் இருந்த மகன் தற்போது 16 வயது வாலிபராக இருந்து இருக்கிறார். அனில் குமார் இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டுள்ளார். குமார் குடும்பத்தினரும், ஊர் மக்களும், கலா குடும்பத்தினை தூக்கி போட்டுவிட்டு யாருடனும் ஓடிப்போனதாகவே நினைத்தோம். இது பெரிய அதிர்ச்சியாகவே இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *