india
வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் வீடு கட்டித்தரும்.. ராகுல் சொன்ன குட்நியூஸ்
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நூற்றுக்கும் அதிகமான வீடு காங்கிரஸ் கட்சியால் கட்டித் தரப்படும் என அதன் தலைவர் ராகுல் காந்தி அறிவித்து இருக்கிறார்.
கேரளா மாநிலம் வயநாட்டு பகுதியில் ஜூலை 30ந் தேதி அதிகாலை முண்டக்கை, சூரல்மலை, நூல்மலை, மேப்பாடி அட்டமலை, ஆகிய மலைக் கிராமங்களில் திடீர் நிலச்சரிவு அடித்தடுத்து ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
நான்காவது நாளாக தேசிய பேரிடர் மீட்பு குழு உடன் இணைந்து ராணுவப் படையினரும் தொடர்ச்சியாக அவர்களை மீட்க போராடி வருகின்றனர். இதில் 200க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை 316ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இன்னமும் 200க்கும் அதிகமானோர் காணவில்லை என கூறப்படுகிறது. மேலும் இதில் பிழைத்த பல குடும்பங்களின் அடிப்படை வாழ்க்கையே இல்லாமல் சென்றுள்ளது. பலரின் மொத்த வீடுமே நிலச்சரிவில் அடித்துக் கொண்டு சென்றதால் அவர்களின் நிலை கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்நிலையில் வயநாட்டு பாதிப்பை நேரில் வந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பார்வையிட்டனர். தன்னுடைய தந்தை இறப்பை போல் இதை உணர்வதாக ராகுல் காந்தி கூறியிருந்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லிய ராகுல் காந்தி நேற்று வயநாட்டிலேயே தங்கியதாக கூறப்படுகிறது.
இன்று காலை இந்திய காங்கிரஸ் செயலாளர் கே.சி. வேணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், இந்திய காங்கிரஸ் செயலாளர் பி.விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி உதவலாம் என ஆலோசித்திருக்கின்றனர்.
அந்த கூட்டத்தில் ஒரே இடத்தில் நிலம் வாங்கி 100க்கும் அதிகமானோருக்கு வீடு கட்ட வேண்டும் என முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொருவரிடம் 8 முதல் 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட வேண்டும் எனவும் ராகுல் காந்தி விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதை அடுத்து கலெக்டரை சந்தித்த ராகுல் காந்தி இது குறித்து விவாதித்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.