Connect with us

india

இந்தியாவின் அடுத்த சோகம்.. ஹிமாச்சலில் மேக வெடிப்பால் கொட்டும் மழை… காணாமல் போன 46 பேர்!..

Published

on

ஹிமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பால் கொட்டிய கடும்மழை காரணமாக பல இடங்களில் வீடுகள் இடிந்து இருக்கும் நிலையில் பலரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது. 

சிம்லா மாவட்டத்தில் இருக்கும் ராம்பூர் அருகே சமேஜ் காட்டில் இன்று (ஆகஸ்ட்1) அதிகாலை மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து 36 பேர் ஆற்றில் அடித்துச் சென்று இருப்பதாக மாவட்ட பேரிடர் மேலாண் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.

அதுமட்டுமல்லாமல், மாநில பேரிடர் மீட்புப் படையினர், இந்தோ மற்றும் திபெத் எல்லைப் பாதுகாப்பு படை இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் துணை ஆணையர் தெரிவித்துள்ளனர்.

ஜே.பி நட்டா ஹிமாச்சல முதல்வர் சுக்விந்தர் சிங்கை தொடர்பு கொண்டு, மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு சார்பில் செய்து தரப்படும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும், பாஜக உறுப்பினர்களும் மீட்புப் பணிகளில் இணைந்து பணியாற்றவும் நட்டா அறிவுறுத்தியுள்ளார்.

மண்டி மாவட்டத்தில் இன்னொரு மேக வெடிப்பு சம்பவமும் நடந்துள்ளது. இதில் 10 பேர் மாயமாகியுள்ளனர். மீட்புப்பணி தொடர்ந்து நடந்த நிலையில், இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிமாச்சல் மழை: https://x.com/KumaonJagran/status/1818837970881069234

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *