india
ஆமா நீட் விஷயத்தில் அது நடந்தது உண்மை தான்… நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட மத்திய அரசு
மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட்டில் இந்த முறை நிறைய குழப்பங்கள் தொடர்ந்து நடந்து இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட நாளைவிட நீட் தேர்வு முடிவுகள் பத்து நாட்கள் முன்னதாக வெளியானது. இதையடுத்து, நீட் வினாத்தாள் கசிவு, 67 பேருக்கு முழு மதிப்பெண்கள் என பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.
இதனால் இந்த வருடம் நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என புகார்கள் குவிந்தது. இந்த 38 மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சுந்திரசூட் அமர்வில் நடந்தது. அந்த விசாரணையில், நீட் வினாத்தாள் கசிந்ததை ஒப்புக்கொள்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு விளக்கமளித்த மத்திய அரசு, ஒரு சில இடத்தில் நீட் வினாத்தாள் கசிந்துள்ளது. அந்த குறிப்பிட்ட பகுதியில் குற்றம் செய்த மாணவர்கள் உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த மாணவர்களின் ரிசல்ட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கே நீட் தேர்வு வினாத்தாள் தூதரகம் மூலம் தான் அனுப்பி வைக்கப்படுகிறது.
வினாத்தாள் டெலிகிராம், வாட்ஸப் மூலம் பரவி இருக்கிறது. இதனால் அது பலருக்கு பரவ வாய்ப்பு உண்டு. வினாத்தாளை கசிய விட்டவர்களை கண்டறியாவிட்டால் நீட் தேர்வை நீக்குவது தான் முறையாகும். நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டு இருந்தால் மறுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் வலியுறுத்தி இருக்கிறது.