india
உபி மத நிகழ்வு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் பலி… 2 லட்சம் நிவாரணம் அறிவித்த அரசு…
உத்திர பிரதேச ஹத்ராஸ் மத கூட்டத்தில் சிக்கிய உயிரிழந்தோரின் எண்ணிக்கை 122ஐ கடந்து இருக்கிறது. பலர் தொடர் சிகிச்சையில் இருப்பது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தனியார் நிகழ்ச்சி உத்திர பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் என்ற இடத்தில் மத நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கானோர் சிக்கி ஒருவர் ஒருவர் மீது ஏறி சென்றனர்.
இடிப்பாடுகளில் சிக்கி பலர் இறந்த நிலையில், பாதிக்கப்பட்ட பலர் பஸ்கள் மற்றும் வேன்களில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஹத்ராஸ் மருத்துவமனைக்கு 60 பேரின் உடல்கள் முதலில் வரப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக உடல்கள் வந்துக்கொண்டு இருக்கிறது என மாவட்ட நீதிபதி ஆசிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல். எடாஹ் மாவட்ட மருத்துவமனைக்கும் 27 பேரின் உடல்கள் வந்துள்ளதாக டாக்டர் உமேஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உத்திர பிரதேச முதல்வர் யோகி அதித்யநாத் எக்ஸ் தளத்தில் கூறுகையில், கூட்ட நெருக்கடியில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காயம் அடைந்தவர்கள் தேவையான சிகிச்சை கொடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வரை 122 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் 100க்கும் அதிகமான உடல்கள் வந்துள்ளதால் அரசு மருத்துவமனை திணறி வருகிறது. ஆக்ஸிஜன் இல்லை எனவும், மருத்துவர்கள் சரியாக இல்லை எனவும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு 2லட்சம் நிவாரணம் கொடுக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.