Connect with us

india

இது ஜனநாயகத்துக்கு எதிரானது!.. சபாநாயகருக்கு கடிதம் எழுதிய ராகுல் காந்தி..

Published

on

rahul

காங்கிரஸ் எம்.பியும், எதிர்கட்சி தலைவருமான ராகுல்காந்தி நேற்று பாராளுமன்றத்தில் பேசிய போது பாஜக மீது பல குற்றச்சாட்டுக்களை வைத்தார்.

என்னிடம் நிமிர்ந்து கை குலுக்கும் சபாநாயகர் மோடியிடம் தலை வணங்கி கை குலுக்குவது ஏன்?.. மணிப்பூர் பிரச்சனையில் மோடி அரசு மவுனம் காத்தது ஏன்?.. மணிப்பூரில் உள்நாட்டு கலவரம் எற்பட காரணமே பாஜகதான்… மோடியும் அமித்ஷாவும் ஏன் மணிப்பூருக்கு செல்லவில்லை?’ என பல கேள்விகளை எழுப்பினார்.

மேலும், பிரதமர் மோடி கடவுளுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கிறார். அவரால் நேரடியாக கடவுளுடன் பேச முடியும். பரமாத்மா நேரடியாக மோடியிடம் பேசுவார். அப்படிப்பட்ட மோடி கடவுளிடம் கேட்டுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டாரா?’ என நக்கலடித்தார் ராகுல்.

இந்துக்கள் என தன்னை கூறிக்கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பு பற்றி மட்டுமே பேசுகிறார்கள். இந்து மதம் என்பது பயம், வெறுப்பு, பொய்களை பரப்பும் மதம் அல்ல. ஆனால், பாஜக 24 மணி நேரமும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. உண்மையான இந்துக்கள் வெறுப்புணர்வை தூண்ட மாட்டார்கள் என ராகுல் காந்தி பேசியிருந்தார்.

rahul

இதைத்தொடர்ந்து, சிறுபான்மை மக்களுக்கு எதிரானது பாஜக, அதானி, அம்பானி மீதான விமர்சனம், நீட் தேர்வு வணிகமயம் ஆகிவிட்டது என அவர் சொன்ன குற்றச்சாட்டு, அக்னிபாத் திட்டம் ராணுவத்திற்கானது அல்ல அது பிரதமர் அலுவலகத்திற்கானது என ராகுல் காந்தி பேசிய வரிகள் நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் ‘மோடியின் உலகத்தில் உண்மைகள் நீக்கப்படும். நான் உண்மையை மட்டுமே பேசினேன். அவர்கள் எதை வேண்டுமானாலும் நீக்கி கொள்ளட்டும்’ என கூறியிருந்தார்.

இந்நிலையில், எனது உரையின் முக்கிய பகுதிகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது. நீக்கப்பட்ட எனது உரையின் முக்கிய பகுதிகளை மீண்டும் சேர்க்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதி இருக்கிறார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *