வலியால் துடிக்கும் வயநாடு…கண்ணீரை வர வழைக்கும் காட்சிகள்…

0
62
Wayanad
Wayanad

எத்தனையோ ஆசைகள், எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு தான் துன்பத்திலும் எல்லாம் மாறிவிடும் என்கின்ற நம்பிக்கையோடு தான் பலரது அன்றாட வாழ்வு நடத்தப்பட்டு வருகிறது. யாரைத் துரத்துகிறது மரணம் என்று யாருக்கும் தெரியாது. எதுவும் நிரந்தரமில்லை என்பதே மனித வாழ்வின் யதார்த்தம். எப்போது வேண்டுமாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இதுவும் கடந்து போகும் என்பது தான் மனதில் இருக்க வேண்டிய உறுதியான எண்ணம்.

நேற்று இருந்தவர்கள் இன்றைக்கு இல்லை, இன்று இருப்பவர்கள் நாளை இருப்பார்களா? என்பது தெரியாது, இதுவே வாழ்க்கை போடும் புதிர், இதற்கு இடையில் யார் பெரியவர் என்கின்ற போட்டி, பொறாமைள் வேறு.

இதுவும் இன்றைய வாழ்வை வாழும் விதமாகவும் இருந்து வருகிறது. நிலாவில் கால் வைத்தாலும், செவ்வாயை நெருங்க நினைத்தாலும் இயற்கையை வென்றவர் இதுவரை கிடையாது என்பதுவே மறுக்க முடியாத உண்மையாக இருந்து வருகிறது.

LandSlide
LandSlide

பல விதமான ஆசைகளோடு இரவில் உறங்கச் சென்றவர்கள், பொழுதை கழித்து இயற்கை அழகை ரசித்து மகிழ சுற்றுலா சென்றவர்கள் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல் ஒரே இரவில் பலரது உயிரை காவு வாங்கி தனது கோரப் பசியை தீர்த்துக் கொண்டது கேரளா வயநாட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு.

மண்ணுக்குள் புதைந்த மனித உயிர்கள், மீட்டெடுக்க பல மணி நேர போராட்டம், வெளியில் எடுத்தப் பிறகு யார் என்பதை அடையாளம் கண்டறிவதில் சிக்கல் இப்படி இயற்கை அன்னை கொடுத்துள்ள வலியோடு கடந்த இரண்டு நாட்களாக வாழ்ந்து வருகின்றனர் வயநாட்டு மக்கள்.

காணாமல் தான் போயிருக்கிறார்களா? அல்லது கடவுளிடமே போய்விட்டார்களா?, படுத்துக்கிடக்கிறார்களா? அல்லது படைத்தவனின் பாதத்திற்கே செல்ல தயாராகி விட்டார்களா? உயிரோடு எங்கேயாவது இருக்கட்டும் என்ற எண்ணமும், அதோடு எங்கே இருக்கிறார்கள்? என்ற தேடலும், உறவுகளைத் தேடி அலையும் மீட்கப்பட்டவர்கள் என கண்ணீர் வரவழைக்கும் காட்சிகளே அரங்கேறி வருகிறது நிலச்சரிவால் பாதிப்பிற்குள்ளான கேரளாவில்.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here