health tips
செயற்கை இனிப்பூட்டிகளில் இவ்வளவு ஆபத்துகள் இருக்கா!.. அப்போ கண்டிப்பா யூஸ் பண்ணாதீங்க!..
நமது நாட்டில் சர்க்கரையை என்பதை எந்த ஒரு நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்தும் முதன்மை பொருளாகவே கருதுகின்றோம். அப்படியான சர்க்கரை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஒரு எதிரியாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு மாற்றாக நாட்டுசர்க்கரை, பனங்கற்கண்டு போன்ற இயற்கையான பொருட்களை நாம் பயன்படுத்தலாம். சமீப காலத்தில் ஆர்டிஃபிசியல் சுகர்(Artificial Sweetner) என அழைக்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் மக்களை பெரிதும் கவர்கின்றன. இந்த வகை சர்க்கரைகளில் கலோரியானது மிகவும் குறைவு. அதனாலேயே மக்கள் பெரும்பாலும் இதனை விரும்புகின்றனர். இவ்வாறான இனிப்புகளை நாம் சாப்பிடுவதால் நமக்கு உடல் சார்ந்த பல பிரச்சினைகள் வருவதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என பார்க்கலாம்.
உடல் எடை அதிகரிப்பு:
செயற்கை இனிப்பூட்டிகள் பொதுவாக குறைந்த கலோரிகளை கொண்டிருப்பதால் இதனை உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பயன்படுத்துவர். ஆனால் உண்மை என்னவென்றால் இது உடலில் கலோரிகளை குறைப்பதால் நமது உடலிற்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் போவதால் நமக்கு அதிகப்படியான பசியையும், அதிக உணவினை உட்கொள்ளவும் செய்கிறது.
மனநிலை சம்பந்தமான பிரச்சினைகள்:
மூளையின் நரம்புகள் வழியாக மூளைக்கு செல்லகூடிய தகவல்கள் இதன் மூலம் பாதிக்கப்படுகிறது. இது மனிதர்களிடையே அவர்களில் நடத்தைகளையும் மனநிலைமையையும் மாற்றுகிறது. இது மூளையின் செரிடினின் எனும் வேதிபொருள் உருவாவதை குறைக்கிறது.
கல்லீரல் பாதிப்பு:
இந்த வகை இனிப்பூட்டிகளை உபயோகிப்பதால் நமது கல்லீரலில் டிரைகிளிசரைடு எனும் வேதிபொருள் அதிக அளவில் சுரக்க செய்வதால் நமது கல்லீரலுக்கு இது தீங்காக அமைகிறது.
வயிறு சம்பந்தமான பிரச்சினைகள்:
செயற்கை இனிப்பூட்டிகள் நமது வயிற்றில் உள்ள சில வயிறு சம்பந்தமான நுண்ணுயிர்களின் அமைப்பினை மாற்றுவதால் இது நமது வயிற்றில் உப்பிசம், வயிற்றுபோக்கு போன்றவைகளை ஏற்படுத்துகிறது.
நோய்காரணிகளை அதிகப்படுத்துகிறது:
இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் டைப்-2 டயாபடிஸ், இதய நோய்கள், வளர்சிதை மாற்ற நோய்கள் போன்றவைகளை உண்டுபண்ணுகின்றன. மேலும் இது நரம்பு சம்பந்தபட்ட வேதிபொருட்களின் அமைப்பை மாற்றுவதனால் தலைவலி மற்றும் மைக்ரேன் என அழைக்கப்படும் ஒற்றை தலைவலியையும் உண்டுபண்ணுகின்றன.
எனவே எந்த ஒரு செயற்கையான பொருளை நாம் உபயோகிக்கும் முன் நமது குடும்பநல மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின் அதனை பயன்படுத்துவதே சிறந்ததாகும்.