உங்களுக்கு வயசே ஆகலையே… இன்னும் அப்படியே இருக்கீங்க!” – இந்த வசனம் இப்போது 90-களில் பிறந்த ‘மில்லினியல்ஸ்’ (Millennials) தலைமுறையினருக்குப் பொருத்தமாகிவிட்டது. 1985 முதல் 1995 வரை பிறந்தவர்கள், தற்போதைய இளம் தலைமுறையான ‘ஜென் ஜி’ (Gen Z) -ஐ விட அதிக இளமையுடன் காணப்படுவதாக ஆய்வுகள் மற்றும் அழகுக்கலை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
வல்லுநர்கள் சொல்லும் ‘ஷாக்’ காரணங்கள்:
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ‘Gen Z Aging Faster’ என்ற விவாதம் தீயாய் பரவி வருகிறது. 20 வயதுகளின் தொடக்கத்தில் இருக்கும் இன்றைய இளைஞர்களை விட, 30-களில் இருக்கும் மில்லினியல்ஸ் ஏன் இளமையாகத் தெரிகிறார்கள் என்பதற்குப் பின்னால் சில முக்கிய காரணங்கள் உள்ளன.
டிஜிட்டல் ஸ்ட்ரெஸ் (Digital Stress):
90-களில் பிறந்தவர்களுக்கு சிறுவயதில் மொபைல் போன் அல்லது சமூக வலைதளத் தொல்லைகள் இல்லை. இதனால் அவர்களின் மன அழுத்தம் குறைவாக இருந்தது. ஆனால் இன்றைய ‘ஜென் ஜி’ தலைமுறை 24 மணிநேரமும் ஆன்லைனில் இருப்பதால் ஏற்படும் பதற்றம் மற்றும் போன் திரையில் இருந்து வரும் ‘ப்ளூ லைட்’ (Blue Light) அவர்களின் சருமத்தைப் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.
ஸ்கின்கேர் குழப்பங்கள்:
இன்றைய இளைஞர்கள் சிறு வயதிலேயே அதிகப்படியான கெமிக்கல் கொண்ட அழகு சாதனப் பொருட்களைப் (Retinol, Fillers போன்றவை) பயன்படுத்துகின்றனர். இது சருமத்தின் இயற்கையான தன்மையைப் பாதிப்பதாகச் சொல்லப்படுகிறது. மாறாக, மில்லினியல்ஸ் எளிமையான முறைகளைப் பின்பற்றுவதே அவர்களுக்குப் பலமாக அமைந்துள்ளது.
உணவு மற்றும் பழக்கவழக்கம்:
மில்லினியல்ஸ் தலைமுறை வளர்ந்த காலத்தில் ‘ஜங்க் ஃபுட்’ கலாச்சாரம் இவ்வளவு அதிகமாக இல்லை. மேலும், முந்தைய தலைமுறையுடன் ஒப்பிடுகையில் மில்லினியல்ஸ் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் கணிசமாகக் குறைந்துள்ளதும், ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதும் அவர்களின் இளமைக்குக் காரணம்.
90s கிட்ஸ் VS 2k கிட்ஸ்:
90-களில் பிறந்தவர்கள் தங்கள் 30-களிலும் ‘Baby Face’ தோற்றத்துடன் வலம் வர, 2k கிட்ஸ்கள் அதிக மன அழுத்தம் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் சீக்கிரமே முதிர்ச்சியான தோற்றத்தைப் பெறுவதாக வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
“சரியான தூக்கம், போன் பயன்பாட்டைக் குறைப்பது மற்றும் தேவையற்ற கெமிக்கல் கிரீம்களைத் தவிர்ப்பதே இளமையைத் தக்கவைக்கும்” என்பதே நிபுணர்களின் அறிவுரையாக இருக்கிறது.