உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச நண்பனைப் பார்த்தா, உடனே மனசு லேசாகி ஒரு சந்தோஷம் பிறக்குமே… அது ஏன் தெரியுமா? அது ஏதோ உணர்வு ரீதியான விஷயம் மட்டும் கிடையாது; அதுக்கு பின்னாடி ஒரு பெரிய ‘கெமிக்கல் மேஜிக்’ நடக்குதுன்னு நியூரோ சயின்ஸ் (Neuroscience) ஆய்வுகள் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளன.
மூளைக்குள் ஒரு தனி ‘ரிவார்டு சென்டர்’:
நாம ஒரு வேலையைச் செஞ்சு முடிச்சுட்டு அதுக்காகப் பரிசு வாங்குறப்போ நம்ம மூளை எவ்வளவு சந்தோஷப்படுமோ, அதே அளவு சந்தோஷத்தை ஒரு நெருங்கிய நண்பரின் முகத்தைப் பார்க்கும்போதும் மூளை உணர்கிறதாம். நண்பரின் முகத்தைப் பார்த்த அடுத்த நொடியே மூளையின் ‘ரிவார்டு சென்டர்’ (Reward Center) தூண்டப்பட்டு, பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சுடுமாம்!
‘கில்லாடி’ கெமிக்கல்கள்:
இந்தச் செயல்பாட்டின் போது ரெண்டு முக்கியமான நியூரோ கெமிக்கல்கள் (Neurochemicals) வேலை செய்யுது.
டோபமைன் (Dopamine):
இதை ‘மகிழ்ச்சி ஹார்மோன்’னு சொல்லலாம். இது சுரக்கும்போது நமக்குத் தன்னம்பிக்கையும், உற்சாகமும் அதிகமாகும். ஒரு நல்ல ஃப்ரண்டைப் பார்த்தா மூளை தானாவே இந்த டோபமைனை வாரி வழங்குது.
ஆக்சிடோசின் (Oxytocin):
இதை ‘பாச ஹார்மோன்’ (Bonding Hormone) என்பார்கள். இதுதான் ஒருத்தர் மேல நமக்கு இருக்கிற நம்பிக்கையை அதிகப்படுத்துது. மன அழுத்தத்தைக் குறைச்சு, பாதுகாப்பான உணர்வைத் தருவதே இந்த கெமிக்கல்தான்.
ஸ்ட்ரெஸ்ஸை விரட்டும் ‘பிரண்ட்’ மருந்து:
இன்றைய அவசர உலகத்துல வொர்க் பிரஷர், டென்ஷன் அப்படின்னு சுத்துறவங்களுக்கு மிகச்சிறந்த மருந்து உங்க நண்பர்கள்தான்.
“ஒரு நெருங்கிய நண்பரின் முகத்தைப் பார்ப்பது, அவர்களின் கண்களைப் பார்த்துப் பேசுவது ஆகியவை உடலில் உள்ள கார்டிசோல் (Cortisol) எனும் ஸ்ட்ரெஸ் ஹார்மோனைப் பாதியாகக் குறைக்கிறது” என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இதனால்தான் என்னவோ, எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் நண்பர்களோட கொஞ்ச நேரம் பேசினா எல்லாம் மறந்து போயிடுது. இனிமேல் டென்ஷனா இருந்தா மாத்திரை தேடாதீங்க… உங்க பெஸ்ட் பிரண்ட் முகத்தைப் பாருங்க!