இனி அரிசிக்கு குட் பை சொல்லுங்க.. ஆரோக்கியமா வாழ இதை ஃபாலோ பண்ணுங்க

தமிழர்களின் பாரம்பரிய உணவான அரிசி நாள்தோறும் உண்ணக்கூடிய உணவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக வெள்ளை அரிசி என்பது பசிக்கு உணவாக பயன்படுகிறதே தவிற அதனால் உடலுக்கு ஒரு நன்மையும் கிடையாது. அதில் எந்தவிதமான ஊட்டச்சத்து பொருட்களும் இருப்பதில்லை.

அந்த காலத்தில் வெள்ளை அரிசியை வருஷத்துக்கு ஒரு முறை அல்லது இரு முறை பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைக்குதான் பயன்படுத்துவார்கள். ஆனால் இப்பொழுது மூன்று வேளையும் அதைத்தான் நாம் சாப்பிடுகிறோம். அரிசி இல்லாத உணவு நாம் பார்க்க முடியாது. தினமும் நாம் உண்ணக்கூடிய உணவில் வெள்ளை அரிசியை குறைத்துக் கொண்டு கீழ்க்கண்ட தானியங்களை எடுத்துக் கொண்டால் பசிக்கு உணவாகவும் உடலுக்கு ஊட்டச்சத்தும் கிடைக்கும்.

ராகி :
ராகியை நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகள் வலுப்பெறும். செரிமானம் சீராகும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்.

திணை அரிசி :
இதயத்திற்கு மிகுந்த பயனுள்ள அரிசி இது. கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளது திணை அரிசி. தோல் ஆரோக்கியத்துக்கும் பயன்படுகிறது.

சோளம் :
ரோட்டு கடைகளில் எளிதாக கிடைக்கக்கூடிய சோளத்தை நாம் தினமும் கொண்டால் செரிமானம் சீராகும் எலும்பு சம்பந்தமான நோய்களை தடுத்து எலும்புகளை வலுவாக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்.

கம்பு :
உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது. செரிமான பிரச்சனையை நீக்குகிறது.

இந்த நான்கு தானியங்களையும் நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளை அரிசி குறைத்து இந்த தானியங்களை தினமும் பயன்படுத்தி வந்தால் மருத்துவமனைக்கு குட் பாய் சொல்லலாம்.

Leave a Comment