மனதை வருடும் உணர்வுப்பூர்வமான ஒரு சம்பவம் இது. தனது குழந்தைகளின் நலனுக்காக தந்தை ஒருவர் எடுத்த தீர்மானம் பலருக்கும் உந்துதலாக மாறியுள்ளது. ஹாஸ்டலில் தங்கி இருக்கும் மகள்கள் அங்கு கிடைக்கும் சாப்பாடு மிகவும் மோசமாக இருக்கிறது, வீட்டில் சமைக்கும் உணவுகளுக்கு ஏங்குகிறார்கள் என்பதை உணர்ந்த சீனாவை சேர்ந்த பாச தந்தை லி, தனது வேலையை விட்டுவிட்டு 900 கி.மீ தூரம் பயணித்து, கல்லூரி அருகே பிரைட் ரைஸ் கடை ஒன்றை தொடங்கினார்.
இந்த முயற்சியின் பின்னணிக்கான காரணம் அவரது மனைவி லுக்கேமியா என்ற ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர் சிகிச்சை அளித்தும் எதிர்பாராத விதமாக காலமானார்.
அதனால் தன்னலம் பாராது, மகள்களின் ஆசையை நிறைவேற்ற தன்னுடைய வாழ்க்கையில் புதிய ஓர் முயற்சியை துவக்கியுள்ளார்.
இது ஒரு அப்பாவின் தியாகமும், பாசமும், பொறுப்பும் இணைந்த சிறந்த உதாரணமாகும். “எனது பிள்ளைகள் அருகில் இருக்கவேண்டும், அவர்களுக்கு என் பாச உணவு கிடைக்கவேண்டும்” என்பதே இந்த முயற்சியின் நோக்கம் என்று தந்தை தெரிவித்துள்ளார்.
இது போல ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்காக செய்யும் நிசப்தமான உழைப்பும், அன்பும் கல்நெஞ்சை கூட கரைய வைக்கும் சம்பவமாக இருக்கிறது.