தமிழ்நாட்டில் வேலைக்காக வந்துள்ள பிற மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அந்தக் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், மாநில அரசின் அனுமதியின்றி தமிழகத்தில் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் செயல்படும் தேர்தல் ஆணையத்தையும், ஒன்றிய அரசையும் கண்டித்து இந்தக் காலவரையற்ற உண்ணாவிரதம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்ட விவரங்கள்:
போராட்டக் களம்: எழும்பூர், ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு
நாள்: 2025 டிசம்பர் 3 (நாளை)
நேரம்: காலை 8:00 மணி முதல்
“வேலைக்காக தமிழ்நாட்டிற்கு வரும் வேறு மாநிலத்தவருக்கு இங்கு வாக்குரிமை அளிப்பது, மாநிலத்தின் உரிமைகளை ‘படுகுழியில் தள்ளும்’ செயல்” என்றும், இதற்கு தேர்தல் ஆணையம் துணை போவதாகவும் கூறி மன்சூர் அலிகான் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளார். அவரது இந்தக் கிளர்ச்சி அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.