கை கொடுக்க மறுத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்… ஆனா ஹாக்கி வீரர்கள் செய்த மாஸ் சம்பவம்!

Indian Players: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான அரசியல் பிரச்சினைகளுக்கு பிறகு விளையாட்டுப் போட்டிகளிலும் அது பிரதிபலித்து வருவதை பார்க்க முடிகிறது. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் தங்களுடைய எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வந்தனர்.

போட்டி முடிந்த பின்னர் பாகிஸ்தான் வீரர்களுக்கு கை கொடுக்க மறுத்ததும், சாம்பியன் ஆன பின்னர் பாகிஸ்தான் சேர்ந்த அமைச்சரிடம் கோப்பையை வாங்க மறுத்து வெறும் கையில் தங்களுடைய வெற்றியை கொண்டாடியதும் இணையதளங்களில் வைரலாக பரவியது.

ind vs pak
ind vs pak

இந்நிலையில் இந்திய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணி  தங்களுடைய போட்டி மனப்பான்மை காட்டி இருக்கும் விஷயம் தற்போது வைரலாக பரவி வருகிறது.  மலேசியாவில் நேற்று ஜோஹர் சுல்தான் நடைபெற்றது. இந்த போட்டி முடிந்த பின்னர் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் இந்திய அணி ஹைஃபை செய்து கொண்டது.

இது குறித்தான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 21 வயதிற்கு உட்பட்ட வீரர்கள் இருபுறமும் நின்று சந்தோஷத்துடன் ஹைபை செய்து கொள்ளும் காட்சிகளும் அதில் இடம்பெற்று இருக்கிறது. பாஹல்காம் பிரச்னைக்கு பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் அணியை மூன்று முறை ஆசியக் கோப்பையில் எதிர்கொண்டது.

எல்லா முறையும் அவர்களுடன் கை கொடுக்க மறுப்பு தெரிவித்தனர். ஆண்கள் அணியையே பெண்கள் அணியும் பின்பற்றினர். இதற்கிடையில் நடந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் மூன்றுக்கு மூன்று கோள்கள் அடித்து ஆட்டத்தை டிரா செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment