அசத்தலான வருடாந்திர சலுகைகளுடன் ஏர்டெல், ஜியோ மற்றும் வி.ஐயின் பிரிபெய்டு திட்டங்கள்.. என்னென்ன இருக்குனு பார்க்கலாமா..

அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் மக்களை தன்வசம் இழுக்க பல்வேறு ரீசார்ஜ் சலுகைகளை வழங்குகின்றன. இதன் போஸ்ட்பெய்டு மற்றும் பிரிபெய்டு என இரு விதமான திட்டங்கள் பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன. அவ்வாறான வரிசையில் பிரபலமான தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் போன்றவை வருடாந்திர பிரிபெய்டு திட்டங்களை மிகவும் லாபகரமான முறையில் மக்களுக்கு அளிக்கின்றன. அதனை பற்றிய தெளிவான தகவல்களை பார்ப்போம்.

ஏர்டெலின் வருடாத்திர ரூ. 1799 திட்டம்:

airtel prepaid plans
airtel prepaid plans

இந்த திட்டமானது மிக குறைந்த அளவு டேடா உபயோகப்படுத்துபவர்களுக்கென உருவாக்கப்பட்ட திட்டமாகும். இதன் மூலம் நாம் அனைத்து நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் கால், 3600 மெசேஜ், 24ஜிபி டேட்டாவையும் பெறலாம். மேலும் இந்த திட்டத்தின் மூலம் நாம் இலவச ஹலோ டியூனையும் விங்க் மியூசிக்கின் இலவச இணைப்பையும் பெறலாம்.

ஜியோவின் வருடாந்திர ரூ. 2879 திட்டம்:

jio prepaid plans
jio prepaid plans

365 நாள் வேலிடிட்டி கொண்ட ரூ. 2879 திட்டத்தின் கீழ் ஒரு நாளுக்கு 2ஜிபி 4G டேட்டாவையும், அன்லிமிடெட் கால் மற்றும் ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமாவின் இலவச இணைப்பையும் பெறலாம். 5ஜி மொபைல் போன் மூலம் 5ஜி டேட்டாவையும் அனுபவிக்கலாம்.

வோடஃபோனின் வருடாந்திர ரூ.1799 திட்டம்:

vi prepaid plans
vi prepaid plans

இத்திட்டத்தின் மூலம் 24ஜிபி 4ஜி டேட்டாவையும், அன்லிமிடெட் கால் மற்றும் நாளுக்கு 100 SMS யும் பெறலாம். மேலும் இதன் ரூ. 2899 திட்டத்தின் கீழ் ஒரு நாளுக்கு 1.5ஜிபி 4ஜி டேட்டாவையும், தினமும் 100 SMSயும் அன்லிமிடெட் கால் மற்றும் விஐ மியூசிகையும் தருகிறது. இந்த திட்டத்தின் மிக முக்கிய சிறப்பம்சம் இரவு 12 மணியிலிருந்து காலை 6 மணி வரையிலும் அன்லிமிடெட் டேட்டா அக்சஸையும் தருகிறது.

Leave a Comment