பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் தேதி 20 11 2025 நாளை முதல் 20 12 2025 தேதி வரை தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நீதிமன்ற உத்தரவின் படி தற்போது வேலையில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலை உருவானது. அதன்படி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆண்டிற்கு மூன்று முறை என்ற விதம் ஜனவரி ஜூலை, டிசம்பர் ஆகிய மாதங்களில் இந்த தேர்வு நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்காக விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுவரை தகுதி பெறாமல் வேலையில் இருக்கும் ஆசிரியர்கள் இந்த தேர்வை பயன்படுத்தி தகுதி பெற வேண்டும் என்றும்,
இன்னும் ஓய்வு பெற 5 ஆண்டுகள் உள்ள ஆசிரியர்களுக்கு தேர்வு இல்லை எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டுள்ளது. ஒருவேளை இந்த தேர்வை பயன்படுத்தாமல் இருக்கும் ஆசிரியர்கள் பணியில் இருந்து கட்டாய ஓய்வு பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்படி தற்போது வேலையில் இருக்கும் முழு நேர, பகுதி நேர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் உள்ளவர்களும் இந்த தேர்வை எழுத வேண்டும்.
தேர்வு நடக்கும் முறை :
இந்த தேர்வு முதல் தாள், இரண்டாம் தாள் என்று இரண்டு தாள்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு டெட் தேர்வு முதல் தாளை இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அதற்கு நிகரான பதிவில் உள்ளவர்கள் எழுத வேண்டும்.
இரண்டாம் தாள் உடல் நலக்கல்வி உதவியாளர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அதற்கு நிகரான பதவியில் உள்ளவர்கள் எழுதலாம்.
எங்கு விண்ணப்பிக்கலாம்..?
விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் https://trb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதற்கு கட்டணமாக ரூபாய் 600 செலுத்த வேண்டும். SC, ST, SCA மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பொழுது கண்டிப்பாக பணியில் இருக்கும் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது முக்கியம்.




