தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை.. ரெட் அலர்ட் கொடுத்துட்டாங்களே..

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மீதமான மழையும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி,மின்னல் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாம்.

மேலும் தமிழகத்தில் இன்று இரவு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி,தூத்துக்குடி,தென்காசி,கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நவம்பர் 29ஆம் தேதி முதல் அதிக கன மழை வாய்ப்பு இருப்பதாகவும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

நவம்பர் 29ம் தேதியில் இருந்து அதிகமான கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அன்று சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று முதல் இன்னும் ஆறு நாட்களுக்கு மிக கனமழை தமிழகத்தில் வரக்கூடும் என்பதால் மக்கள் அதற்கு ஏற்ப பாதுகாப்பாக இருக்குமாறு தமிழக அரசால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Comment