சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள பூச்சி ஆராய்ச்சி மையத்தில் புதிய வகை காபி அறிமுகமாகியுள்ளது. இது சாதாரண காபி அல்ல. இதில் உலர்ந்த கரப்பான பூச்சிகள் (Dried Mealworms) உணவாக சேர்க்கப்பட்டுள்ளன. இக்காபி, கரப்பான பூச்சியை பொடியாக்கி தூளாக்கி தயாரிக்கப்படுகிறது.
இந்த வகை காபி சுமார் ரூ.570க்கு விற்பனை செய்யப்படுவதால், வாடிக்கையாளர்கள் அதனை ஆச்சரியத்துடன் ஏற்றுக்கொள்கின்றனர். இக்காபியின் சுவை கொஞ்சம் வித்தியாசமானதுதான். ஆனால், கரப்பான பூச்சிகளில் இருக்கும் புரதச்சத்து மற்றும் சத்துக்கள் காரணமாக, இது ஆரோக்கியமான ஒரு பரிமாற்றமாக கருதப்படுகிறது.

இதைப்பற்றி மருத்துவர்கள் கூறுவதாவது, “இது ஒரு பசுமை உணவாக கருதப்படக்கூடியது. புரதம் மற்றும் சத்துகள் அதிகம் உள்ளதால், குறிப்பாக உடல்சக்திக்க் தேவைப்படும் மனிதர்களுக்கு இது பயன்படக்கூடும்” என்கின்றனர்.
இதேபோல், உலகில் பல நாடுகளில் பூச்சிகள் உணவாக பயன்படுத்தப்படும் கலாச்சாரம் இருந்தாலும், காபியில் இதைச் சேர்ப்பது ஒரு புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. அடுத்து ஒரு கொரோனா வருவதற்கு இந்த காப்பி தான் காரணமாக இருக்கும் எனவே, உலக மக்கள் தயாரா இருக்கவும் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.