நீங்க செஞ்சா அது ‘புரோட்டோகால்’… நாங்க செஞ்சா அது தமிழ் விரோதமா? கண்ணாடி முன்னாடி நின்னு பேசுங்க ‘உடன்பிறப்புகளே’… உங்க முகத்துல இருக்குற முகமூடி கழண்டு விழும்! ஆதாரத்தோட பேச வந்திருக்கோம்… அடங்கி போறதுக்கு இல்ல! 2021-ல நீங்க பண்ண அதே மரபுதான் இது… இப்போ மட்டும் ஏன் இந்த திடீர் கதறல்?

தமிழக அரசியல் களத்தில் ‘மாநில சுயாட்சி’ மற்றும் ‘தமிழ் உணர்வு’ குறித்து பேசி வரும் திமுகவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் பின்பற்றப்பட்ட நெறிமுறைகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, விழாவின் தொடக்கத்தில் முதலில் வந்தே மாதரம், அதன்பின் தேசிய கீதமும், அதன் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டதைச் சுட்டிக்காட்டி, இது தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிரானது என திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஆனால், கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது, அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பதவியேற்பு விழாவிலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டது என்பதற்கான ஆதாரங்களைத் தவெகவினர் வெளியிட்டு, ‘உடன்பிறப்புகளின்’ இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளனர்.

இந்த நடைமுறை மாற்றத்திற்குப் பின்னால் இருக்கும் சட்டப்பூர்வமான காரணங்களையும் தவெகவினர் முன்வைக்கின்றனர். மூன்று நாட்களுக்கு முன்புதான் மத்திய அமைச்சரவை, ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு தேசிய கீதத்திற்கு இணையான மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்ற புதிய வழிகாட்டுதல்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், ஆளுநர் பங்கேற்கும் அதிகாரப்பூர்வ அரசு நிகழ்வுகளில் குறிப்பிட்ட சில ‘புரோட்டோகால்’ முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது விதியாகும்.

ஆளுநரின் செயலாளர் அறிவுறுத்தலின் பேரில், ஆளுநர் கலந்துகொள்ளும் பதவியேற்பு விழா என்பதால், அந்த அதிகாரப்பூர்வ மரபுகள் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளன. இதில் மாநில உணர்வை கொச்சைப்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது.

திமுக ஆட்சி பதவியேற்கும்போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடப்பட்டதாக சமூக வலைதளங்களில் பொய்ப் பிரச்சாரம் செய்யும் ‘இணைய கூலிகளுக்கு’ தவெக தரப்பினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். முந்தைய பதவியேற்பு விழாக்களின் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு, அன்று கடைப்பிடிக்கப்பட்ட அதே மரபுதான் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர். இதன் மூலம், விஜய்யின் வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடியாமல் எதற்கெடுத்தாலும் ‘தமிழ்’ என்ற ஆயுதத்தை கையில் எடுத்து அரசியல் செய்யும் போக்கு அம்பலமாகியுள்ளது.

மேலும், சட்டசபை நிகழ்வுகளை பொறுத்தவரை அங்கு சபாநாயகர் மற்றும் முதல்வர் விஜய் எடுக்கும் முடிவுகளே இறுதியானது என்பதை தவெகவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆளுநர் மாளிகை நடத்தும் விழாவிற்கும், மக்கள் பிரதிநிதிகள் கூடும் சட்டசபைக்கும் உள்ள வித்தியாசத்தை புரியாமல் பேசுபவர்களுக்கு, சட்டசபை கூடும்போது முதல்வர் விஜய் வகுக்கும் புதிய நெறிமுறைகள் சரியான பதிலடியாக அமையும். அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஒலிக்கும் முறைகளில் மாநில அரசின் உரிமைகள் எவ்வாறு நிலைநாட்டப்படும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என அவர்கள் சவால் விடுத்துள்ளனர்.

இறுதியாக, முதல்வர் விஜய்யின் நிர்வாக திறமையையோ அல்லது அவர் அறிவித்த மக்கள் நலத்திட்டங்களையோ விமர்சிக்க முடியாமல், இத்தகைய சிறுபிள்ளைத்தனமான சர்ச்சைகளை உருவாக்குவது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம் என்று நடுநிலையாளர்கள் கருதுகின்றனர். பதவியேற்ற முதல் நாளிலேயே அதிரடி திட்டங்களை அறிவித்து வேலை செய்ய தொடங்கியுள்ள முதல்வருக்கு கிடைத்துள்ள ஆதரவை கண்டு அஞ்சி, இத்தகைய பொய் பிரச்சாரங்களை திமுகவினர் கட்டவிழ்த்து விடுவதாக தெரிகிறது. எதுவாக இருந்தாலும், “நிஜமான புரோட்டோகால் என்ன என்பதை விஜய் கோட்டையில் அமர்ந்து நிரூபிப்பார்” என்ற நம்பிக்கையில் தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.

Leave a Comment