லஞ்ச் பிரேக் விட்டா மூணு மணி நேரம் ரெஸ்ட் எடுப்பீங்கனு நினைச்சீங்களா? நீங்க தட்டை கழுகுறதுக்குள்ள நான் சீட்ல வந்து உட்கார்ந்திருப்பேன்! என் ஜனங்களோட பசியை தீர்க்க வந்திருக்கவன் நான்… எனக்கு மதிய சாப்பாடு முக்கியம் இல்ல, மக்கள் வேலைதான் முக்கியம்! தேவைப்பட்டா விடிய விடிய ஆலோசனை கூட்டம் நடக்கும்.. ஒருத்தரையும் தூங்க விடமாட்டேன்…

தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே கோட்டையில் நிர்வாக நடைமுறைகளும், அரசு அதிகாரிகளின் பணிச் சூழலும் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளன. தேர்தல் களத்தில் கொடுத்த வாக்குறுதிகளைத் துரிதமாக நிறைவேற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தினமும் ஒரு நாள் கூடத் தவறாமல் தலைமைச் செயலகத்திற்கு வந்து தங்கி, அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளையும் மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். முதலமைச்சரின் இந்த அதிரடி மற்றும் சுறுசுறுப்பான வருகையானது, கடந்த காலங்களில் மந்தமாகக் கிடந்த அரசு இயந்திரத்திற்குப் புதியதொரு அசுர வேக உத்வேகத்தை அளித்துள்ளதாகத் தலைமைச் செயலக ஊழியர்கள் பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர்.

இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக, கடந்த மே 16-ஆம் தேதி கோட்டையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற மிக முக்கியத் துறை ரீதியான ஆலோசனைக் கூட்டத்தைக் குறிப்பிடலாம். அரசு நலத்திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து நடைபெற்ற இந்த விவாதம், திட்டமிட்ட நேரத்தைத் தாண்டி மதிய உணவு இடைவேளை வரை மிக நீண்டுகொண்டே சென்றுள்ளது. பசியினாலும், நீண்ட நேர விவாதத்தினாலும் சோர்வடைந்த சில உயர் அதிகாரிகள், நாற்காலியில் நெளிந்தபடி, “சாப்பிட நேரமாகிவிட்டது சார்…” என்று முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். அதிகாரிகளின் சூழ்நிலையைப் புரிந்துகொண்ட முதலமைச்சர் விஜய், எவ்விதத் தயக்கமுமின்றி, “உணவு இடைவேளைக்குப் பிறகு மீட்டிங்கைத் தொடரலாம்” எனக் மிகக் கூலாகக் கூறிவிட்டுக் கிளம்பியுள்ளார்.

முதலமைச்சர் வழக்கம்போலத் தனது இல்லத்திற்குச் சென்று பொறுமையாகச் சாப்பிட்டுவிட்டு வர எப்படியும் ஓரிரு மணி நேரங்கள் ஆகும் என்று கணக்கு போட்ட அதிகாரிகள், நிம்மதியாகச் சாப்பிடத் தொடங்கியுள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் எதிர்பாராத அதிர்ச்சி அடுத்த சில நிமிடங்களில் கோட்டையில் அரங்கேறியுள்ளது. கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அடுத்த பதினைந்தே நிமிடங்களில், முதலமைச்சர் விஜய் மிக எளிமையாகத் தனது மதிய உணவை முடித்துக் கொண்டு, மீண்டும் ஆலோசனைக் கூட்ட அறைக்குள் ‘என்ட்ரி’ கொடுத்துள்ளார். முதலமைச்சரின் இந்த மின்னல் வேக வருகையைக் கண்டு, இன்னும் உணவருந்தி முடிக்காத உயர் அதிகாரிகள் அனைவரும் திகைத்து, அதிர்ந்து போய் நின்றுள்ளனர்.

அதிகாரிகள் மதிய உணவை முடித்துவிட்டு வரும் வரை பொறுமையாகக் காத்திருந்த முதலமைச்சர் விஜய், அன்று மாலை 6 மணி வரை சற்றும் சோர்வடையாமல் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார். ஒரு மாநிலத்தின் முதன்மைப் பதவியில் இருக்கும் நபர், தனது தனிப்பட்ட வசதிகளையோ அல்லது உணவு நேரத்தையோ கூடப் பொருட்படுத்தாமல், மக்கள் பணிக்காகக் காட்டும் இந்த அசாத்திய அர்ப்பணிப்பு கோட்டையிலுள்ள ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தலைவனே இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கும்போது, தாங்கள் சாமனியக் காரணங்களைக் கூறிப் பணிகளைத் தள்ளிப்போட முடியாது என்ற தார்மீகப் பொறுப்புணர்வை இந்த நிகழ்வு அதிகாரிகளுக்குள் விதைத்துள்ளது.

இளம் ரத்தங்கள் மற்றும் புதிய முகங்களுடன் அமைந்துள்ள இந்த புதிய தவெக ஆட்சியில் எவ்விதமான நிர்வாகத் தவறுகளோ அல்லது லஞ்ச ஊழல் புகார்களோ எழவே கூடாது என்பதில் முதலமைச்சர் விஜய் மிகத் தெளிவாக உள்ளார். இதற்காகத் தனது அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களிடமும், “மக்களிடம் கெட்ட பெயர் வாங்கும் படியான எந்தவொரு சின்னத் தவறும் உங்கள் துறையில் நடந்துவிடக் கூடாது” என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார். வெறும் வாய்மொழி எச்சரிக்கையோடு நிறுத்தாமல், ஒவ்வொரு அமைச்சரின் அன்றாடச் செயல்பாடுகளையும், துறை சார்ந்த கோப்புகளின் நகர்வுகளையும் மிக உன்னிப்பாகக் கண்காணிப்பதற்கென ஒரு சிறப்பு உயர் அதிகாரியையும் முதலமைச்சர் நியமித்துள்ளார்.

இந்தச் சிறப்பு அதிகாரி மூலமாக வாராந்திர அடிப்படையில் ஒவ்வொரு அமைச்சரின் செயல்திறன் மற்றும் நேர்மை குறித்த விரிவான ரகசிய அறிக்கையை பெற்று, அதன் அடிப்படையில் தவெக ஆட்சி நிர்வாகத்தை முழுமையாக தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்ற இந்த ‘கார்ப்பரேட் ஸ்டைல்’ முற்போக்கு நிர்வாக முறை, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய புரட்சிகரமான மாற்றமாகும். முதலமைச்சரின் இந்த தீவிர கண்காணிப்பும், அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பும், வரும் காலங்களில் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றப் போவது உறுதி என்று சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

Leave a Comment