ஸ்ரேயா ஐயர் செய்தது கிரிமினல் குற்றம்… முன்னாள் கிரிக்கெட் வீரர் கடும் தாக்குதல்

ஐபிஎல் இறுதி போட்டி கடந்த 3-6-2025 அன்று நடந்தது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த இரு அணிகளும் இதுவரை கோப்பைகளை கைப்பற்றியதே கிடையாது. அதிலும் குறிப்பாக ஆர் சி பி அணி மூன்று நான்கு முறை இறுதிப் போட்டியில் விளையாடினாலும் அவர்களாலும் கோப்பையை வெல்ல முடியவில்லை.

பஞ்சாப் கிங்ஸ் அணி இதற்கு முன் 2014 ஆம் ஆண்டு தான் இறுதிப் போட்டியில் விளையாடி தோல்வியுற்றது. எல்லா சீசங்களிலும் ஆட்டங்கள் முடிவில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி இந்த முறை இறுதிப்போட்டி வரை சென்றது. அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும் அவர்களை வழிநடத்திய பெருமை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை சாரும்.

கடந்த ஆண்டு ஐ பி எல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் விளையாடினார். கேப்டனாக நன்கு விளையாடி கோப்பையும் வென்று கொடுத்தார். இருந்தாலும் அணி நிர்வாகம் அவரை தக்க வைக்காமல் ரிலீஸ் செய்தது. இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு இந்த ஆண்டு ஐ பி எல் இறுதி போட்டி வரை அழைத்துச் சென்றுள்ளார்.

பெங்களூர் அணியும் பஞ்சாப் அணியும் 18 ஆண்டுகள் கோப்பை கனவில் இருந்தன. இறுதியில் பெங்களூர் அணி தனது 18 ஆண்டு கால கனவை நினைவாக்கியது. ஒரு பக்கம் பெங்களூர் அணி கோப்பையை கை பற்றினாலும் மறுபக்கம் பஞ்சாப் அணிக்கு இந்த முறையும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இதற்கு பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடுவதற்கு தான் காரணம் என்று பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

shreyas iyer
shreyas iyer

அதிலும் குறிப்பாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யோகராஜ் சிங் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை கடுமையாக சாடியுள்ளார். அரை இறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடி இறுதிப்போட்டைக்கு அழைத்துச் சென்ற‌ ஐயர் இறுதிப் போட்டியில் விளையாடத் தெரியாதது போல் விளையாடியதாக கூறியுள்ளார்.
அவர் ஆடிய ஷாட் என்னை பொறுத்தவரை கிரிமினல் குற்றம் இதற்காக அவரை இரண்டு போட்டிகளில் தடை கூட செய்யலாம் இவருக்கு மன்னிப்பே கிடையாது. என்று கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். இறுதி ஆட்டத்தின் போது வெறும் 1 ரன்னில் அவுட் ஆனது மிகப்பெரிய ஏமாற்றத்தை பஞ்சாப் ரசிகர்களுக்கு கொடுத்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Leave a Comment