எங்க ஏரியா.. உள்ளே வராதே.. அமெரிக்காவுக்கு டென்மார்க் விட்ட ‘வார்னிங்’.. களமிறங்கும் முப்படைகள்

கிரீன்லாந்து என்ன விற்பனைப் பொருளா? என்று டென்மார்க் ஏற்கனவே எகிறிய நிலையில், இப்போது ஒரு படி மேலே போய் அமெரிக்காவுக்கு ‘மரண பயத்தை’ காட்டியுள்ளது. கிரீன்லாந்தை வளைக்கத் துடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அதிரடித் திட்டங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கிரீன்லாந்து எல்லைகளில் தனது முப்படைகளையும் டென்மார்க் அதிரடியாகக் குவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு விழுந்த ‘செக்’!
வெனிசுலாவில் அதிரடி காட்டிய டிரம்ப், அடுத்ததாகக் கிரீன்லாந்து மீது தனது பார்வையைத் திருப்பியுள்ளார். “கிரீன்லாந்து அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அவசியம், அதை நாங்க வாங்கியே தீருவோம்” என டிரம்ப் அடம் பிடித்து வருகிறார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள டென்மார்க் அரசு, இன்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முப்படைகள் அதிரடி:
கிரீன்லாந்தைப் பாதுகாக்க விமானப்படை, கடற்படை மற்றும் தரைப்படை வீரர்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

நேட்டோ (NATO) படைகள் வருகை:
டென்மார்க் ராணுவத்துடன் இணைந்து ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் நார்வே போன்ற நேட்டோ நட்பு நாடுகளின் படைகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளன.

ஆபரேஷன் ஆர்க்டிக் எண்டூரன்ஸ்:
‘ஆபரேஷன் ஆர்க்டிக் எண்டூரன்ஸ்’ (Operation Arctic Endurance) என்ற பெயரில் பிரம்மாண்ட ராணுவப் பயிற்சியைத் தொடங்கி, அமெரிக்காவுக்கு நேரடி வார்னிங் கொடுத்துள்ளது டென்மார்க்.

நாங்க ரெடி.. நீங்க ரெடியா?
ஏற்கனவே, “கிரீன்லாந்துக்குள் அத்துமீறி நுழைந்தால் முதலில் சுடுவோம், அப்புறம்தான் கேள்வி கேட்போம்” என 1952-ஆம் ஆண்டு விதியைத் தூசு தட்டி எடுத்து டென்மார்க் எச்சரிக்கை விடுத்திருந்தது. தற்போது தரைப்படை மற்றும் போர்க்கப்பல்களைக் குவித்துள்ளதன் மூலம், அமெரிக்காவுடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

பனிப்பிரதேசமான கிரீன்லாந்தில் இப்போது அனல் பறக்கும் ‘ராணுவ காய்ச்சல்’ தொற்றிக்கொண்டுள்ளது. டிரம்ப் தனது பிடியைத் தளர்த்துவாரா? அல்லது நேட்டோ நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடிப் போர் வெடிக்குமா? என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி!

Leave a Comment