ஓட்டுக்காக இந்துக்கள் வஞ்சிக்கப்படுகிறார்களா?’ – திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி மோகன் ஜி ஆதங்கம்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விதிக்கப்பட்ட தடை குறித்து பிரபல இயக்குனரும், சமூகச் செயற்பாட்டாளருமான மோகன் ஜி, மிகுந்த வேதனையுடன் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அனைவருக்கும் மத நல்லிணக்கம் இருக்கும்போது, இந்துக்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த வருஷம் ஆவது :
”திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏத்த தடை போட்டது ரொம்ப வருத்தமா இருக்கு. எல்லோரும் மத நல்லிணக்கத்தோடு தான் வாழ்கிறோம். இந்துக்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஓட்டுக்காக வஞ்சிக்கப்படுகிறார்களா?
குறிப்பிட்ட பிரிவினரின் வாக்குகளுக்காக (ஓட்டுக்காக) இந்துக்கள் வஞ்சிக்கப்படுவதாக தனக்குப் புரியவில்லை என்றும் மோகன் ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், நீதிமன்றமே உறுதியாக உத்தரவு பிறப்பித்தும் தீபம் ஏற்ற முடியவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“குறிப்பிட்ட பிரிவினரின் ஓட்டுக்காக ஏன் இந்துக்களை வஞ்சிக்கிறாங்கன்னு புரியல. நீதிபதி இவ்வளவு ஸ்ட்ராங்கா உத்தரவு போட்டு தீபம் ஏற்ற முடியல. அடுத்த வருஷமாவது ஏத்துவோம்னு நம்புறேன்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இயக்குனர் மோகன் ஜி வெளியிட்ட இந்த கருத்து, சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

Leave a Comment