“விஜய் கண்கலங்கினாலே என்னால பார்க்க முடியாது” – நடிகர் விஜய் மீது தனக்கு இருக்கும் அதீத ஈர்ப்பு குறித்து இயக்குநர் ராஜகுமாரன் பகிர்ந்துள்ள தகவல் இப்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
படம் பிடிக்கலையா? பாசம் தடுக்கலையா?
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் ராஜகுமாரன், தளபதி விஜய் நடித்த படங்களைப் பார்த்த அனுபவம் குறித்துப் பகிர்ந்து கொண்டார். “நான் ‘பிகில்’ படத்தைப் பார்த்தேன், அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் ‘தெறி’ படத்தை என்னால் முழுமையாகப் பார்க்கவே முடியவில்லை” என்று கூறி அதிர வைத்தார்.
சகிக்க முடியாத காட்சிகள்:
அதற்கான காரணத்தைச் சொல்லும்போதுதான் அவர் ஒரு தீவிர ரசிகராக மாறிப் பேசினார். “தெறி படத்தில் விஜய் சாகுறது போன்ற காட்சிகளை எல்லாம் என்னால் பார்க்கச் சகிக்கவில்லை. பொதுவாகவே விஜய் கண்கலங்கினாலே என்னால் பார்க்க முடியாது. ஏனோ தெரியவில்லை, அவர் மீது நமக்கு அப்படி ஒரு ஈர்ப்பு இருக்கிறது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ரசிகர்களை மிஞ்சிய இயக்குநர்:
பொதுவாக ஒரு இயக்குநராகப் படத்தைப் பார்க்காமல், ஒரு ரசிகராக அந்தப் பாத்திரத்தோடு ஒன்றிப்போய்த்தான் தன்னால் படம் பார்க்க முடிகிறது என அவர் கூறியுள்ளார். ஒரு சக இயக்குநர் விஜய் மீது வைத்திருக்கும் இந்த “சென்டிமென்ட்” பாசம், விஜய் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.