இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் போது, உலகம் ஒரு பெரிய மாற்றத்தின் பாதையில் பயணிக்கிறது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி பல தொழில்களில் மனித பணியை மாற்றி விடக்கூடிய அளவிற்கு சென்றுவிட்டது. இதனால், பொருளாதாரத்தில் பெரும் அதிர்வுகள் ஏற்படலாம் என்பதை நிதி நிபுணர்களும், பொருளாதார அறிஞர்களும் எச்சரிக்கின்றனர்.

உலகப்புகழ்பெற்ற “Rich Dad Poor Dad” புத்தகத்தின் ஆசிரியரும், நிதி நிபுணருமான ராபர்ட் கியோசாகி வழங்கிய எச்சரிக்கைதான். அவர் கூறுவது, இது உலக வரலாற்றிலேயே மிக மோசமான பொருளாதாரச் சீரழிவாக இருக்கக்கூடும். இதற்கு செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியும், பணவீக்கம், பணபுழக்கக் குறைபாடும் முக்கிய காரணங்கள்.
பல கோடி மக்கள் தங்கள் சேமிப்பை இழக்கும் நிலை ஏற்படக்கூடும் என்பதையும் அவர் கூறுகிறார். இந்தச் சூழ்நிலையில் தப்பிக்க ஒரு முக்கியமான வழி என்னவெனில், தங்கம், வெள்ளி, பிட்காயின் போன்ற மாறில்மதிப்புப் பொருட்களில் முதலீடு செய்வதுதான் என அவர் அறிவுறுத்துகிறார்.