பிசிசிஐ-யின் சர்ப்ரைஸ் தேர்வு.. சூர்யகுமார் தலைமையில் இளம் பட்டாளம் ரெடி.. 2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட பலமிக்க இந்திய அணியைப் பிசிசிஐ (BCCI) இன்று அறிவித்துள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதிர்ச்சி அளிக்கும் சுப்மன் கில் நீக்கம்:

இந்திய அணியின் நட்சத்திர வீரராகப் பார்க்கப்பட்ட சுப்மன் கில்லுக்கு இந்த முறை அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய ஃபார்ம் மற்றும் அணியின் காம்பினேஷன் காரணமாக அவர் ஓரம் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சஞ்சு சாம்சனுக்கு மெகா சான்ஸ்:

இந்த உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பராக மட்டுமல்லாமல், தொடக்க வீரராகவும் (Opener) களம் இறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்சனுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த இரட்டைப் பொறுப்பு அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஷான் கிஷனின் மீள்வருகை:

சுமார் இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பிடிக்கப் போராடி வந்த இஷான் கிஷனுக்கு, ஒருவழியாக மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிரடி ஆட்டக்காரரான அவர் மிடில் ஆர்டரில் பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி விபரம்:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் பட்டேல் (துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்.

அனுபவம் மற்றும் இளமை கலந்த இந்த கூட்டணி மீண்டும் உலகக்கோப்பையைத் தக்கவைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment