தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியா ODI அணி அறிவிப்பு.. அணியின் கேப்டன் இவரா?

இந்தியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி தற்போது இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா உடனான டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

டெஸ்ட் போட்டி முடிவடைந்தது நவம்பர் 30 ஆம் தேதி முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாக உள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் போட்டி டிசம்பர் 3-ம் தேதியும் கடைசி போட்டி டிசம்பர் 6ஆம் தேதியும் நடைபெற உள்ளது. ஒரு நாள் போட்டிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பிசிசிஐ ஒரு நாள் தொடருக்கான புதிய இந்திய அணியை அறிவித்துள்ளது.

அதில் இந்திய அணிக்காக கேப்டனாக தற்போது செயல்பட்டு வரும் சுப்மன் கில் காயம் காரணமாக விலகி உள்ளார். மேலும் ஸ்ரேயாஸ் ஐயரும் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளனர். மேலும் மூத்த வேகபந்து பந்துவீச்சாளர் பும்ராவும் ஓய்வில் இருக்கிறார்.

ஆனால் அணிக்கு பலம் சேமிக்கும் வகையில் மூத்த அதிரடி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அணியில் இடம் பெற்றுள்ளனர். இவர்களை வலி நடத்த கே எல் ராகுல் இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ருத்து ராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால் போன்றவர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணி விவரம் :
கே எல் ராகுல் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா, பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், துருவ் ஜுரேல்.

Leave a Comment