லைவ்-வில் லவ் புரொப்போஸ்.. புதின் முன்னிலையில் அரங்கேறிய காதல் நாடகம்..

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆண்டுதோறும் நடத்தும் பிரம்மாண்ட செய்தியாளர் சந்திப்பில், அரசியல் கேள்விகளுக்கு நடுவே அரங்கேறிய ஒரு காதல் சம்பவம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நேரலையில் அதிரடி:

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தச் செய்தியாளர் சந்திப்பில், நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர். அப்போது ஒரு பத்திரிகையாளர், அதிபரிடம் கேள்வி கேட்பதற்காகப் பதாகை ஏந்துவதற்குப் பதிலாக, தனது காதலிக்கு ‘புரொப்போஸ்’ (Propose) செய்யும் வாசகங்கள் அடங்கிய பதாகையை உயர்த்திப் பிடித்தார்.

புதின் கொடுத்த ‘ஸ்வீட்’ கிண்டல்:

இந்தச் சுவாரஸ்யமான நிகழ்வைக் கவனித்த சக பத்திரிகையாளர்கள், அந்தப் பெண்ணும் காதலுக்குச் சம்மதம் தெரிவித்துவிட்டதாகத் தகவலைப் பகிர்ந்தனர். உடனே குறுக்கிட்ட அதிபர் புதின், புன்னகையுடன், “அப்படியானால் திருமணத்திற்கு இப்போதே நீங்கள் ஏற்பாடுகளைத் தொடங்கலாம்,” என்று கிண்டலாகக் கூறி அந்தப் பத்திரிகையாளரை வாழ்த்தினார்.

அதிபர் மாளிகைக்கு அழைப்பு:

அத்துடன் நிற்காமல், “திருமணம் முடிந்த பிறகு நீங்கள் இருவரும் அதிபர் மாளிகைக்கு (Kremlin) வாருங்கள், உங்களைச் சந்திக்கிறேன்,” எனத் தம்பதிக்குத் தனது வாழ்த்துகளுடன் கூடிய அழைப்பையும் விடுத்தார்.

கடுமையான போர்ச் சூழல் மற்றும் அரசியல் பதற்றங்களுக்கு இடையே, அதிபர் புதினின் இந்த கலகலப்பான பக்கம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. வழக்கமாக மிகவும் சீரியஸாகக் காணப்படும் புதின், காதலர்களுக்காகத் தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Comment