இனிமே ‘Like’ போட்டா விவாகரத்து தான்!.. கணவன்மார்களுக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றத் தீர்ப்பு!

திருமணமான ஆண்கள் சமூக ஊடகங்களில் மற்ற பெண்களின் பதிவுகளுக்குத் தொடர்ந்து ‘Like’ செய்வது சட்டப்படி குற்றமென்றும், அது விவாகரத்து கோருவதற்கான தகுந்த காரணம் என்றும் துருக்கி நாட்டு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

துருக்கியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினார். அந்த மனுவில், “தனது கணவர் சமூக ஊடகங்களில் மற்ற பெண்களின் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளுக்குத் தொடர்ந்து ‘Like’ செய்து வருவதாகவும், இது தங்களது திருமண உறவைச் சிதைப்பதோடு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கைப் பரிசீலித்த நீதிமன்றம், மனைவியின் வாதத்தை ஏற்றுக்கொண்டது. ஒரு திருமணமான ஆண், தனது மனைவியைத் தவிர மற்ற பெண்களின் சமூக ஊடகப் பதிவுகளைத் தொடர்ந்து விரும்புவது (Like செய்வது), அந்தத் திருமண உறவின் மீதான நம்பிக்கையைச் சிதைக்கும் செயல் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

“சமூக ஊடகங்களில் இதுபோன்ற செயல்பாடுகள் குடும்ப அமைப்பைப் பாதிப்பதோடு, துணையை அவமதிக்கும் செயலாகக் கருதப்படும்” எனக் கூறி, அந்தப் பெண்ணுக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சமூக ஊடக யுகத்தில் ‘Like’ என்பது வெறும் ஒரு பட்டன் மட்டுமல்ல, அது ஒருவரது உணர்வுகளோடும் உறவுகளோடும் தொடர்புடையது என்பதை இந்தத் தீர்ப்பு உணர்த்தியுள்ளது. கணவன்மார்கள் சமூக ஊடகங்களைக் கையாளும் முறையில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பு சர்வதேச அளவில் கவனிக்க வைத்துள்ளது.

Leave a Comment