100 ரூபாய் போதும்.. 90 நாட்களுக்கு ஓடிடி திட்டங்களை அள்ளித்தரும் ஜியோ

ஜியோ தனது கஸ்டமர்களுக்கு மூன்று ott (over the top) நன்மை கொண்ட திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் விலை 100,175,195 என நிர்ணயித்துள்ளது. இந்த மூன்று விலைகளில் இரண்டிற்க்கு மட்டும் ஜியோ ஹாட்ஸ்டார் 90 நாட்களுக்கு முற்றிலும் இலவசம்.

ஜியோ 100 இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி மொத்தம் 90 நாட்கள் 5 ஜிபி ஹை ஸ்பீட் வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. அது முடிவடையும் பட்சத்தில் அதன் வேகம் 64kbps ஆக குறைக்கப்பட்டு இணைய சேவை வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் வருகிறது.

175 ரூபாய் திட்டத்தில் 10 ஜிபி வரையிலான ஹை ஸ்பீட் டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்திற்கான வேலிடிட்டி 28 நாட்களுக்கு மட்டும்தான். ஆனால் இதில் 10 ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் வருகிறது. SonyLIV, ZEE5, LionsgatePlay, Discovery+, SunNXT, KanchhaLannka, Planet Marathi, Chaupal, Hoichoi, மற்றும் JioTV போன்ற ஆப்கள் அடங்கும்.

195 ரூபாய் திட்டம் இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 90 நாட்கள் வேலிடிட்டி உடன் 15 gb வரையிலான ஹை ஸ்பீட் டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இதற்கு ஜியோ ஹாட்ஸ்டார் சப்ஸ்க்ரிப்ஷன் வருகிறது.

 

Leave a Comment