பயிற்சியாளர் vs மேலாளர்.. கம்பீர் குறித்து கபில்தேவ் கிளப்பிய புதிய சர்ச்சை..

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வரும் நிலையில், தற்போதைய கிரிக்கெட் உலகில் ‘பயிற்சியாளர்’ (Coach) என்ற பதவியே தேவையில்லாத ஒன்று என முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

மேலாளர் தான் கம்பீர்:

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கபில்தேவ், “என்னை கேட்டால் தற்போதைய கிரிக்கெட் சூழலில் பயிற்சியாளர் என்ற பொறுப்பே இல்லை என்று தான் சொல்வேன். கௌதம் கம்பீரை இந்திய அணியின் மேலாளராக (Manager) வேண்டுமானால் சொல்லலாம், ஆனால் அவரைப் பயிற்சியாளர் என்று அழைக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

யார் உண்மையான பயிற்சியாளர்?

பயிற்சியாளர் என்ற சொல்லுக்குக் கபில்தேவ் ஒரு புதிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார். “பயிற்சியாளர் என்றால் எங்களுக்குப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கிரிக்கெட்டின் அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தவர்களையே சாரும். அவர்கள் தான் உண்மையான பயிற்சியாளர்கள். சர்வதேச அளவில் விளையாடும் வீரர்களுக்கு நுணுக்கங்களை விட, அவர்களை வழிநடத்தும் ஒரு மேலாளர் தான் தேவைப்படுகிறார்” என்றார்.

தொடரும் விவாதம்:

கௌதம் கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி சில பின்னடைவுகளைச் சந்தித்த நிலையில், கபில்தேவின் இந்த விமர்சனம் விளையாட்டு வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கம்பீர் போன்ற ஒரு ஆளுமைக்கு ‘மேலாளர்’ என்ற முத்திரை குத்துவது சரியா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

Leave a Comment