தமிழக அரசியல் வரலாற்றில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.கருணாநிதி அவர்கள் ஆட்சிக்கு ஏகப்பட்ட முட்டுக்கட்டைகளையும் குடைச்சல்களையும் கொடுத்தார் என்பது வரலாற்று உண்மை. வெறும் 46 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே கையில் வைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் ஒரு வாரம் தொடர் பஸ் ஸ்டிரைக் நடத்தி, எம்.ஜி.ஆர் அரசுக்கு மிகப்பெரிய குடைச்சலை ஏற்படுத்தினார். ஆனால், அத்தகைய அரசியல் சூழ்ச்சிகளையும் நெருக்கடிகளையும் தன் அசாத்திய மக்கள் செல்வாக்கின் மூலம் முறியடித்து தான் எம்.ஜி.ஆர் மாபெரும் சாதனை படைத்தார். அதன் விளைவாகவே, எம்.ஜி.ஆர் உயிரோடு இருக்கும் வரை கருணாநிதியால் மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் உட்காரவே முடியவில்லை.
அதே போன்றதொரு வரலாற்று சூழல் தான் தற்போதும் தமிழ்நாட்டில் அரங்கேறி கொண்டிருக்கிறது என்று தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆவேசமாக தெரிவித்து வருகின்றனர். தவெக தலைவர் விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவின் ஸ்டாலினும், உதயநிதியும் புதிய அரசுக்கு தொடர்ந்து பல்வேறு வழிகளில் இடைஞ்சல்களையும் முட்டுக்கட்டைகளையும் கொடுத்து வருகின்றனர். தவெக அரசின் மக்கள் நல திட்டங்களை முடக்கவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கிளப்பவும் அவர்கள் செய்யும் அரசியல் சூழ்ச்சிகளை தற்போதைய முதல்வர் விஜய் மிக சாதுரியமாக கையாண்டு வருகிறார்.
எம்.ஜி.ஆரின் வரலாற்றை சுட்டிக்காட்டி தவெகவினர் தற்போது சவால் விடுத்துக் கூறி வருவது என்னவென்றால், “இன்றைக்கு வேண்டுமானால் நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளலாம்; முதல்வர் விஜய் அவர்கள் அரசியலில் இருக்கும் வரை, ஸ்டாலினாக இருந்தாலும் சரி, அவரது வாரிசு உதயநிதியாக இருந்தாலும் சரி, இனி எந்த காலத்திலும் அவர்களால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் சீட்டில் உட்காரவே முடியாது.” மக்கள் மத்தியில் முதல்வர் விஜய் சம்பாதித்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையும், விர்ச்சுவல் வாரியர்ஸ் உள்ளிட்ட தொண்டர்களின் பலமும் இருக்கும் வரை, திமுகவின் குடும்ப அரசியல் இனி தமிழகத்தில் எடுபடாது என்று தவெகவினர் மிக காரசாரமாக தங்களின் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.