மாநாடு…நடைபயணம்…வேகம் எடுக்கப்போகிறதா விஜயின் அரசியல்?…

தமிழ வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியைத் துவங்கி தனது அரசியல் வாழ்விற்கான முதல் படியில் அடி எடுத்து வைத்தார் நடிகர் விஜய். தன்னுடைய திரைப்படங்களின் மூலம் அரசியல் குறித்த பஞ்ச் டயலாக்குகளை வைத்தே தனக்கு அரசியல் மீதான ஆசை உண்டு என்பதை சொல்லி வந்திருக்கிறார் முன்னரே.

‘டீனேஜ் கவர்மென்ட்டின் சீஃப் மினிஸ்டர் நீ’ என தனது படத்தில் பாடலை வைத்தவர் இவர் அப்போதே. 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை கவனத்தில் வைத்து கட்சியை துவங்கியுள்ள விஜய், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி பங்கேற்காது, யாருக்கும் தனது ஆதரவு கிடையாது என்பதை துவக்கத்திலேயே  திட்டவட்டமாக அறிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தனது கட்சியின் அடுத்த அடுத்த கட்ட பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்பதையும் சொல்லியிருந்தார். சொன்னதன் படியே இப்போது கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் விஜய்.

விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘கோட்’ படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது.
படம் வெளிவந்த பிறகு தனது கட்சியின் உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்று திரட்டும் விதமாக மாநாடுகளை நடத்தவும் விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. மக்களை நேரடியாக சென்று சந்திக்கும் விதமாக நடை பயண நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டம் வகுக்கப்படுவதாகவும் இந்த தகவல் தெரிவிக்கிறது.

TVK
TVK

நீட் தேர்வு எதிர்ப்பு மூலம் பாஜகவின் மீதான தனது எதிர்ப்பை மறைமுகமாக விஜய் காட்டியுள்ளதாக பேசப்பட்டு வந்த நிலையில் இது வரை நாற்பத்தி எட்டு லட்சக் பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை உறுப்பினர்களாக தங்களை இணைத்துள்ள நிலையில் கட்சியில் இரண்டு லட்சம் பேருக்கு பதவி வழங்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

விஜய் அரசியலின் அடுத்த கட்ட நகர்வுகளை பற்றிய இந்த செய்திகளை பிரபல தமிழ் நாளிதழ் தனது வலைதள பக்கத்தில் செய்தியாக வெளியிட்டிருக்கிறது.

Leave a Comment