2026 களம் தயார்.. நாம் தமிழர் கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!.. ஆரம்பமே அமர்க்களமா இருக்கு

வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ளார். மொத்தம் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் முடிவை அறிவித்துள்ள நாம் தமிழர் கட்சி, முதற்கட்டமாக 100 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தை சூடுபிடிக்கச் செய்துள்ளது.

முக்கிய முகங்களுக்கு வாய்ப்பு:
சீமான் வெளியிட்டுள்ள இந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும், புதிதாக இணைந்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

veerappan daughter Vidya Rani
veerappan daughter Vidya Rani

கட்சியின் பேச்சாளரும், பிரபலமான முகமுமான இடும்பாவனம் கார்த்திக்கு வேட்பாளராக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் கவனிக்கத்தக்க அறிவிப்பாக, சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கும் வேட்பாளர் பட்டியலில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இவர் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Idumbavanam Karthik
Idumbavanam Karthik

பாலினச் சமத்துவத்திற்கு முக்கியத்துவம்:
கடந்த தேர்தல்களைப் போலவே, இந்த முறையும் நாம் தமிழர் கட்சி சம பாலின பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளித்து வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள 100 வேட்பாளர்களில் சுமார் 40 சதவீதத்தினர் பெண்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகியவை இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் வேட்பாளர் தேர்வுப் பணிகளைத் தொடங்காத நிலையில், சீமான் முன்னதாகவே 100 வேட்பாளர்களை அறிவித்திருப்பது, கட்சியின் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், களப்பணிகளை முன்கூட்டியே தொடங்கவும் ஒரு உத்தியாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Comment