மறந்து போன கட்சிக்கு எதுக்கு டார்ச் லைட்?.. கமல் கட்சியை ‘கரைச்சு ஊத்திய’ சவுக்கு சங்கர்!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் கட்சிகளுக்குச் சின்னங்களை ஒதுக்கும் பணியைத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சிக்கு மீண்டும் ‘டார்ச் லைட்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை வைத்து அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது பாணியில் கமலைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

அந்த லட்சணத்துல கட்சி இருக்கு!
மக்கள் நீதி மய்யத்தின் தற்போதைய நிலையைச் சுட்டிக்காட்டிய சவுக்கு சங்கர், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பைக் கிண்டல் செய்துள்ளார். அவர் கூறுகையில்,

“வேட்பாளரே இருக்காங்களா இல்லையா என்கிற நிலைமையில்தான் தற்போது கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி இருக்கிறது. இந்த லட்சணத்தில் கமலுக்குத் தேர்தல் ஆணையம் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி உள்ளது. உண்மையில் அவரே இதைக் கேட்கவில்லை!”

கமலே கோபப்படுற அளவுக்குப் பண்ணிட்டாங்க!
மக்களை விட கமல்ஹாசனே தனது கட்சியை மறந்துவிட்டதாகக் குறிப்பிட்ட சவுக்கு சங்கர், தேர்தல் ஆணையம் அவருக்குச் சின்னம் ஒதுக்கி ‘நினைவூட்டல்’ செய்திருப்பதாகக் கூறினார்.

“அண்ணே சின்னம் வந்துடுச்சு, தேர்தலில் போட்டியிடலாம்’ என்று இப்போதாவது அவர்கள் தொண்டர்களிடம் சொல்வார்கள். மக்கள் ஏற்கனவே அந்தக் கட்சியை மறந்து விட்டார்கள். தற்போது கட்சி உயிரோடு இருப்பதைத் தேர்தல் ஆணையம் அவர்களுக்குத் தேவையில்லாமல் நினைவூட்டி இருக்கிறது. கமலே கோபப்படுற அளவுக்குத் தான் தேர்தல் ஆணையம் இந்த வேலையைப் பண்ணியிருக்கு,” என்று அவர் விளாசினார்.

காணாமல் போனதா டார்ச் லைட் வெளிச்சம்?
2019 மக்களவைத் தேர்தலில் ஓரளவு வாக்குகளைப் பெற்ற மநீம, 2021 சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து, தேர்தலில் போட்டியிடாமல் ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் பரப்புரைகளில் மட்டும் கவனம் செலுத்தியது.

தற்போது 2026 தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில், சவுக்கு சங்கரின் இந்த ‘கமெண்ட்’ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சின்னம் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் மநீம தொண்டர்களுக்குச் சவுக்கு சங்கரின் இந்த விமர்சனம் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Comment