இந்தியாவில் வருகிற 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் எட்டாம் தேதி வரை டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது. இம்முறை இந்த உலகக் கோப்பை போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளன. மொத்தம் 20 அணிகள் இந்த உலகக் கோப்பை போட்டிகளில் பங்கு பெறுகிறது.
அவை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். தற்போது இந்தியாவில் எந்தெந்த மைதானத்தில் டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் என்ற அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் போட்டி நடைபெறும் மைதானங்கள் :
அருண் ஜெட்லி ஸ்டேடியம் டெல்லி, ஈடன் கார்டன்ஸ் கொல்கத்தா, india t20 world cupஎம்ஏ சிதம்பரம் ஸ்டேடியம் சென்னை, நரேந்திர மோடி ஸ்டேடியம் அகமதாபாத், வாங்கடே ஸ்டேடியம் மும்பை ஆகியவை அடங்கும். அதன் பிறகு இலங்கையில் : கண்டி, கொலம்போ மைதானத்தில் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்திய அணியை பொறுத்தவரையில் தனது முதல் போட்டியை பிப்ரவரி 7ஆம் தேதி அமெரிக்காவை எதிர்கொள்கிறது இப்போட்டி மும்பையில் நடைபெறுகிறது. மேலும் சென்னையில் மொத்தம் 6 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் ஒன்றில் கூட இந்திய அணி விளையாடவில்லை.
சூப்பர் 8 சுற்று நடைபெறும் மைதானங்களில் சென்னையும் இடம் பெற்றுள்ளது. ஆனால் அதற்கான அணி விபரம் தற்போது தெரியாது. சென்னையில் இந்திய அணி விளையாடாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது.