சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டு, ஒரு உயிரையே பலிவாங்கிய சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தீபக் என்பவர் மீது குற்றச்சாட்டு சுமத்தி வீடியோ வெளியிட்ட ஷிம்ஷிதா முஸ்தபா, தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
என்ன நடந்தது?
கடந்த ஜனவரி 16-ம் தேதி, கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து கண்ணூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் தீபக் என்பவர் பயணம் செய்தார். அதே பேருந்தில் பயணம் செய்த ஷிம்ஷிதா, தீபக் தன் மீது அத்துமீறி உரசுவதாகக் கூறி ஒரு 18 வினாடி வீடியோவை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அந்த வீடியோ செம வைரலானது.

அவமானத்தால் முடிந்த உயிர்:
வீடியோ வைரலானதால், ஊரே தீபக்கை தவறாகப் பேசத் தொடங்கியது. “நான் எந்தத் தப்பும் செய்யல, கூட்ட நெரிசலில் கை பட்டது அவ்வளவுதான்” என தீபக் கதறியும் யாரும் நம்பவில்லை. சமூக வலைதளங்களில் நடந்த இந்தத் “தீர்ப்பால்” மனமுடைந்த தீபக், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஓடி ஒளிந்த ஷிம்ஷிதா:
தீபக் தற்கொலை செய்துகொண்ட செய்தி பரவியதும், ஷிம்ஷிதா மீது மக்கள் கோபம் திரும்பியது. “ஒரு சாதாரண விஷயத்தைப் பெருசு பண்ணி ஒரு உயிரையே எடுத்துட்டயே!” என பலரும் கண்டனம் தெரிவித்தனர். தீபக் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில், தற்கொலைக்குத் தூண்டியதாக (Section 108 BNS) ஷிம்ஷிதா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கைதுக்கு பயந்து ஷிம்ஷிதா தலைமறைவானார். தனது போனை ஆஃப் செய்துவிட்டு, கேரளாவின் பல்வேறு இடங்களில் பதுங்கி இருந்தார்.
போலீஸ் போட்ட ஸ்கெட்ச்:
போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி போலீசார் நேற்று (ஜனவரி 21) அதிரடியாகச் செயல்பட்டு, ஒரு உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ஷிம்ஷிதாவை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
“சோஷியல் மீடியாவுல லைக்ஸ் வாங்கணும்னு ஒருத்தர் மேல பொய் புகார் சொல்லி அவமானப்படுத்தினா, அது எப்பேர்ப்பட்ட விபரீதத்தை உருவாக்கும்ங்கிறதுக்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடம்.”